Serial: விஜய் டிவியில் புதுசாக வருகை தருவதற்கு தனம், பூங்காற்று திரும்புமா சீரியல் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் அடிவாங்கி வருகிறது. அதனால் அந்த சீரியலை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக புதுசாக காத்துக் கொண்டிருக்கும் சீரியலை இறக்குவதற்கு விஜய் டிவி பிளான் பண்ணிவிட்டது.
அந்த வகையில் முதலில் தனம் என்ற சீரியல் வரப்போகிறது. இதில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் தங்கையாக நடித்த ஆதிரை என்கிற சத்தியா முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த சீரியலின் கதை தன் ஆசைப்பட்ட கணவருடன் சேர்ந்து வாழ்க்கை ஆரம்பிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கணவருக்கு விபத்து ஏற்பட்டு விடுகிறது.
கணவருடன் வாழ முடியாமல் கண்ணீருடன் தனிமையில் இருக்கும் தனம், கணவரின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து விடுகிறார். அந்த வகையில் புகுந்த வீட்டில் நுழைந்த தனம், கணவர் அவருடைய குடும்பத்திற்காக செய்ய நினைத்த விஷயங்களை எல்லாம் தான் முன்னே நின்று செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டி புகுந்த வீட்டில் இருப்பவர்களை கரை சேர்க்க முயற்சி எடுக்கும் ஒரு பெண்ணின் துணிச்சலான விஷயமாக கதை நகரப் போகிறது.
அந்த வகையில் இந்த சீரியலுக்கு பதிலாக தற்போது மொக்கை என்று ஒஸ்ட் என பெயர் வாங்கிய வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் இனிது உடன் முடிவடைகிறது. அர்ஜுன் செய்த தவறை மன்னிக்க முடியாமல் பார்வதி ஆசிரமத்தில் இருந்த நிலையில் அர்ஜுனுக்கு வேற வழி தெரியாததால் வீட்டில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு சாக வேண்டும் என்பதற்காக கடற்கரைக்குள் போய்விடுகிறார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட குடும்பத்தினர்கள் அர்ஜுனை காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்து விடுகிறார்கள். அர்ஜுன் உயிருக்கு போராடும் நிலைமையில் இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட பார்வதி, ஆஸ்பத்திரியில் வந்து அர்ஜுனை மன்னித்து சேர்ந்து வாழ்வதற்கு சம்மதம் கொடுத்து விடுகிறார்.
அந்த வகையில் இந்த நாடகம் முடிவு பெற்றுவிட்டது. இதனை தொடர்ந்து பூங்காற்று திரும்புமா என்ற புது சீரியலுக்கு பாக்கியலட்சுமி சீரியலை முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மொத்தமாக பூசணிக்காய் உடைக்க போகிறார்கள். பாக்யாவின் கதை சிறப்பாக இல்லாவிட்டாலும் அதில் நடித்த ஒவ்வொரு ஆர்டிஸ்டிகளின் நடிப்பையும் மறக்க முடியாத அளவிற்கு மக்கள் மனதை வென்று விட்டார்கள்.