வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மணிமேகலையை வச்சு செஞ்ச விஜய் டிவி.. CWC5 தோல்வி பயத்தால் எடுத்த முடிவு

Cook With Comali 5: ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. இப்ப கூத்தாடிகள் ரெண்டு பட்டு ஊரையே கொண்டாட்டப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். விஜய் டிவி மற்றும் சன் டிவிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு வருவதை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

விஜய் டிவியின் மெகா ஹிட் சோவை தயாரித்த மீடியா மேசன் நிறுவனத்தையே சன் டிவி தன் கைக்குள் கொண்டு வந்து விட்டது. இதனால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

இதை இந்த சேனல் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. என்ன பண்ணினாலும் குக் வித் கோமாளி சீசன் ஐந்து நிகழ்ச்சியில் எந்த சுவாரசியத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

CWC5 தோல்வி பயத்தால் எடுத்த முடிவு

சன் டிவியில் டாப் குக் டூப் புக் நிகழ்ச்சி சிரிப்பலையில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் விஜய் டிவி புதிய முடிவை எடுத்து இருக்கிறது. இதற்காக அவர்கள் மணிமேகலையை தேர்வும் செய்து இருக்கிறார்கள். குக் வித் கோமாளியின் பிரபலமான சீசங்களில் கோமாளியாக வந்து பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தார் மணிமேகலை.

சிவாங்கி குக் ஆன பிறகு நான் கோமாளியாக இருக்க மாட்டேன் என விஜய் டிவியிடம் சண்டை போட்டு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஆனார். இப்போது அந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி இல்லாததால் மணிமேகலையை மீண்டும் கோமாளி ஆக்கிவிட்டார்கள்.

இது இந்த வாரம் மட்டும்தான் இந்த சீசன் முழுக்க வா என இனி தான் தெரியும். மணிமேகலை கோமாளியாக பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர். அதிலும் அவர் போட்ட சோட்டா பீம் கெட்ட இந்திய அளவில் ட்ரெண்டானது. இதனால் தான் மீண்டும் மணிமேகலையை கோமாளி ஆக்கி சோதனை செய்கிறது விஜய் டிவி.

குக் வித் கோமாளி 5 பற்றிய மேலும் சில செய்திகள்

Trending News