Vijay Tv Serial: விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோ, காமெடி நிகழ்ச்சிகள், திறமையை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சிகள் என காட்டி ஒவ்வொரு விதத்திலும் மக்களிடம் தனித்துவமான இடத்தை பெற்றிருந்தார்கள். அதே மாதிரி சீரியலையும் கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமாக டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து வந்தார்கள். அந்த வகையில் சன் டிவியுடன் போட்டி போடும் விதமாக இரண்டாவது இடத்தில் விஜய் டிவி சீரியல்கள் இடம் பிடித்து வந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சன் டிவியை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு விஜய் டிவியின் சிறகடிக்கும் ஆசை சீரியல் முதல் இடத்தை பெற்றிருந்தது. ஆனால் எல்லாம் தலைகீழாக மாறியது போல தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் அடிவாங்கி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து விட்டது. அந்த வகையில் கடந்த வாரம் முதல் ஐந்து இடத்திலுமே சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடித்தது.
புதிதாக சன் டிவியில் கலக்கி வரும் மூன்று சீரியல்கள்
அதற்கு காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களை மக்கள் தொடர்ந்து பார்த்து வந்த நிலையில் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு வெறுப்பை சம்பாதித்து விட்டது. அதிலும் சிறகடிக்கும் ஆசை சீரியலில் எப்பொழுது ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்து இருந்த பொழுது பெரிய ஏமாற்றமாக ரோகினி ஒவ்வொரு விஷயத்திலும் எஸ்கேப் ஆகிக்கொண்டு தப்பித்து விட்டார்.
அதிலும் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் இருந்தாலும் எல்லா விஷயத்திலும் அமைதியாக இருந்து பார்ப்பதற்கு எரிச்சலை ஊட்டும் விதமாக நடிப்பு இருந்ததால் இந்த நாடகத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டது. இதற்கு அடுத்தபடியாக மகாநதி சீரியலில் விஜய் மற்றும் காவிரி உடைய கெமிஸ்ட்ரி நடிப்புக்காக மட்டுமே தொடர்ந்து மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் இவர்களுக்கு இருக்கும் காதலை ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லாமல் தொடர்ந்து பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை சந்தித்து வருவதால், போங்கடா நீங்களும் உங்க சீரியலும் சும்மா கடுப்பேத்துறீங்க என்று புலம்பும் படியாக அடுத்தடுத்து பிரச்சினைகள் வர ஆரம்பித்து காவிரி மற்றும் விஜய் பிரிவதற்கு மனஸ்தாபங்கள் ஏற்பட்டுவிட்டது.
இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கொடுத்து பார்த்து வந்ததற்கு முக்கிய காரணம் ராஜி, கதிர் மற்றும் மீனாவின் நடிப்பு தான். ஆனால் போகப்போக இவர்களுடைய காட்சியை குறைத்துக் கொண்டு தங்கமயில், பித்தல மயிலாக பண்ணும் ஆர்ப்பாட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஓவராக கொண்டு இருக்கிறது.
அதிலும் செந்தில் கேரக்டருக்கு வெங்கட் வந்த பிறகு கதிர் உடைய கதாபாத்திரம் மொத்தமாகவே குறைந்துவிட்டது என்பதற்கு ஏற்ப மக்களுக்கு பெரிய ஏமாற்றமாக ஆகிவிட்டது. அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலில் கதை ஒன்றுமே இல்லை என்றாலும் கோபியின் நடிப்புக்காக மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது கோபியின் நடிப்பும் சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்வதற்கேற்ப கேரக்டரை மோசமாக இருக்கிறது. இதனால் இப்படி ஒரு மோசமான சீரியல் தேவையா என்று சொல்லும் அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியலை வெறுத்து விட்டார்கள்.
இப்படி இந்த சீரியல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நெகட்டிவ் விமர்சனங்களை வாங்கி வருவதால் சன் டிவி நாடகமே பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு அனைவரும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டார்கள். அதனால் புதிதாக வந்திருக்கும் மூன்று முடிச்சு, மல்லி, மருமகள் சீரியலுக்கு மக்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைத்து விட்டது.
- Vijay tv 5 Serial: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் விஜய் டிவியின் 5 சீரியலின் கதை
- சன் டிவியை விட விஜய் டிவியில் சுவாரசியமாக போகும் 6 சீரியல்கள்
- விஜய் டிவி சீரியலில் கலக்கி வரும் மயில்சாமியின் மகன்