Vijay Tv Serial: ஒவ்வொரு வாரமும் வெளி வருகின்ற டிஆர்பி ரேட்டிங்கின்படி தான் எந்த சீரியல்கள் மக்களிடத்தில் அதிகமாக வரவேற்பை பெறுகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை சன் டிவி சீரியல் தான் தக்க வைத்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது விஜய் டிவி சீரியல் தான்.
ஆனாலும் கம்மியான புள்ளிகளை மட்டும் தான் விஜய் டிவி சீரியல் பெற்று வருகிறது. அந்த வகையில் பெருசாக மக்களிடம் ரீச் ஆகாத சில சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் அதை முடிக்கும் வகையில் விஜய் டிவி பிளான் பண்ணி வைத்திருக்கிறது. இதனால் தற்போது பெயிலியர் என்ற ஒரு சீரியல் முடிவுக்கு வரப் போகிறது.
இதற்கான கிளைமாக்ஸ் காட்சிகள் இன்று எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. அதனால் கூடிய விரைவில் அந்த சீரியல் முடிந்துவிடும். அந்த சீரியல்தான் பெய்லியர் தவிர அதில் நடித்த ஹீரோ இரண்டு ஹிட் சீரியல்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஈரமான ரோஜா முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் வெற்றிகரமாக நடித்த ஹீரோ திரவியம் தான்.
தற்போது இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வருகின்ற வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் பெருசாக ரீச் ஆகவில்லை என்றாலும் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை பெற்று ஃபெயிலியர் என்ற முத்திரையை பதித்து விட்டது. அதனால் இந்த சீரியலை முடிக்க முடிவு பண்ணி இன்று கிளைமாக்ஸ் காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டார்கள்.
அந்த வகையில் ஹீரோ திரவியம் இன்னொரு புது சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார். அதுவும் விஜய் டிவியில் தற்போது புதுசாக ஒளிபரப்பாகி வருகின்ற சிந்து பைரவி என்ற சீரியலில் தான். இந்த சீரியல் ஆரம்பித்த இந்த வாரத்திலேயே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து திரவியத்தை மறுபடியும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
மேலும் வீட்டுக்கு வீட்டு வாசப்படி சீரியல் முடிந்தாலும் இதற்கு பதிலாக இரண்டு புது சீரியல் வரிசையில் இருக்கிறது. அந்த வகையில் பூங்காற்று திரும்புமா மற்றும் தனம் என்ற இரண்டு சீரியல்களும் இருப்பதால் இப்போதைக்கு முதலில் வருவது தனம் சீரியல்தான். இதில் கதாநாயகியாக எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தங்கையாக நடித்து வரும் ஆதிரை தான் கமிட் ஆகியிருக்கிறார். அந்த வகையில் இந்த சீரியல் கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ய தயாராக இருக்கிறார்கள்.