விஜய் மாநாட்டிற்கு தேதி அறிவித்தும் கழுத்தை சுற்றிய பாம்பாக இருக்கும் அடுத்த பிரச்சனை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக-அதிமுகவிற்கு போட்டியாக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் கொடி மற்றும் பாடலையும் வெளியிட்டு அசத்தினார். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் நடத்தலாம் என்று நீண்ட கால விவாதத்திற்கு பிறகு விழுப்புரம் விக்கிரவாண்டியை தேர்வு செய்தார்.

இந்த மாநாடு நடத்துவதில் ஆளும் கட்சி சார்பாகவும் பல குடைச்சல்கள் கொடுக்க பட்டது. முதலில் செப்டம்பர் 22 நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது திடீரென்று திமுக மாநாடு நடத்தப்போவதாக அறிவித்தது. இதனால மீண்டும் தேதி தள்ளிப்போனது. தற்போது ஒரு வழியாக மாநாடு நடக்கப்போகும் புதிய தேதியை அறிவித்தார் விஜய்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

vijay-tvk
vijay-tvk

ஆனால் இந்த முறையும் விஜய் க்கு ஒரு சவால் வந்துள்ளது. இந்த முறை சதி செய்யப்போவது, கட்சி அல்ல.. மழை. ஆம் இனி வரும் காலங்களில் மழை வெளுத்து வாங்க போகிறது. அதுவும் குறிப்பாக அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர் மாதத்தில் மழை ஒவ்வொரு மாநிலமாக பெய்ய துவங்கும். ஆனால் விக்கிரவாண்டி பகுதியில், அக்டோபர் இறுதியில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மழை கண்டிப்பாக இருக்காது என்று யாரும் உறுதியளிக்கவில்லை.

- Advertisement -spot_img