Vijay-TVK: விஜய்யின் அரசியல் வருகைதான் இப்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே மாணவர்களையும் பொது மக்களையும் கவரும் பணிகளை அவர் தொடங்கி விட்டார்.
![vijay-tvk](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/09/vijay-tvk-2.webp)
அதை அடுத்து இப்போது கட்சி கொடி, பாடல் என அடுத்தடுத்த பணிகளை திட்டமிட்டு வரும் இவர் முதல் மாநில மாநாட்டிற்கும் தயாராகி இருக்கிறார். இதற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில் தற்போது தளபதியின் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
![vijay-tvk](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/09/vijay-tvk-3.webp)
அதன்படி வரும் அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலை கிராமத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது. அது பற்றி தெரிவித்து இருக்கும் விஜய் இது நமது வெற்றிக் கொள்கை மாநாடு.
வாகை சூட வரும் விஜய்
நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும் நாம் அடையப்போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நேரத்தில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது.
அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் மூலம் வலிமையான அரசியல் பெரும் பாதையை அமைப்போம். இதை வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.
விரைவில் சந்திப்போம் வாகை சூடுபோம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களும் பொதுமக்களும் வெற்றி உன் வசமாகட்டும் வாகை சூட வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர். அதே சமயம் அரசியல் வட்டாரத்திலும் இது எதிர்பார்ப்பு கலந்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தளபதியின் முதல் மாநில அரசியல் மாநாடு
- தள்ளி போகும் தளபதியின் முதல் கட்சி மாநாடு
- விஜய்யின் அரசியல் கட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்
- TVK மாநாட்டிற்கு வருகிறாரா ராகுல் காந்தி.?