Vijay: விஜய் கட்சி ஆரம்பித்த கையோடு 2026 சட்டமன்ற தேர்தல் தான் என்னோட டார்கெட் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் தற்போது நாட்டில் நிகழும் பல விஷயங்கள் குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசை கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்றதும் அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றியது.
இதற்கு முன்னதாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமரான மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றிற்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி
ஆனால் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற திமுகவுக்கு வெளிப்படையாக வாழ்த்து தெரிவிக்கவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறியிருந்தார்.
இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு கூட விஜய் வாழ்த்து தெரிவிக்காதது விமர்சனமாக மாறியது. இப்படிப்பட்ட சூழலில் தற்போது ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் விஜய் தன் சோசியல் மீடியா பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நாட்டு மக்களுக்கு சேவை செய்ய என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது அவருடைய இந்த பதிவு வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் ஒரு வழியாக வாழ்த்து சொல்லியாச்சு எனவும் கமென்ட் கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் தமிழக வெற்றிக் கழகம் எப்போதுமே வாழ்த்துக் கழகம் தானா என கிண்டல் அடித்தும் வருகின்றனர்.