செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் மறக்க முடியாத 50வது பிறந்த நாள்.. அசிங்கப்படுத்திய 5 காரணங்கள், குளிர் காயும் கமல் வெறியர்கள்

Vijay: விஜய் கடந்த 22 ஆம் தேதி தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். இதை மிகப்பெரிய அளவில் அமர்க்களப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் முன்கூட்டியே பல பிளான்களை போட்டு வைத்திருந்தனர்.

ஆனால் கள்ளக்குறிச்சி நிகழ்வால் இந்த கொண்டாட்டங்களுக்கு விஜய் தடை உத்தரவு போட்டார். ஆனாலும் அடங்காத விசுவாசிகள் சில பல வேலைகளை செய்து பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டார்கள்.

அதாவது இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சில முந்திரிக்கொட்டைகள் ஒரு சிறுவனை வைத்து சாகச நிகழ்வை நடத்தினார்கள். அப்போது அந்தப் பையன் கையில் தீப்பிடித்த சம்பவம் சலசலப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

அதேபோல் கள்ளக்குறிச்சிக்கு விஜய் சென்றதும் கிண்டலடிக்கப்பட்டது. அவங்கெல்லாம் வீரமரணம் அடைந்தவர்களா? குடிச்சிட்டு மருத்துவமனையில் இருப்பவர்களை விஜய் எதற்காக போய் பார்க்க வேண்டும் என சர்ச்சை பேச்சுக்கள் கிளம்பியது.

மறக்க முடியாத விஜய் பிறந்தநாள்

அது போதாது என்று கீர்த்தி சுரேஷ், த்ரிஷா இருவரும் விஜய் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்தது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தற்போது சில ஆதாரங்களை திரட்டி விஜய்யை அசிங்கப்படுத்தும் முயற்சியில் கமல் வெறியர்கள் இறங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி விஜய் தன்னை சந்திப்பதற்காக வீட்டு வாசலில் காத்திருக்கும் ரசிகர்களை கண்டு கொள்வதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவருடைய காரை பார்த்துவிட்டு ப்ளீஸ் அண்ணா என்று கெஞ்சி கதறியும் கூட அவர் கண்ணாடியை இறக்கிக் கூட அவர்களுக்கு தரிசனம் கொடுக்கவில்லை.

இது பத்தாது என்று அஜித் வேறு விஜய் பிறந்தநாள் என்று தன்னுடைய ரக ரகமான போட்டோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவை தன் பக்கம் திருப்பப் பார்த்தார். இவை எல்லாம் கமல் ரசிகர்கள் கையில் அல்வா கிடைத்தது போல் ஆகிவிட்டது.

அதைத்தொடர்ந்து இப்போது அவர்கள் விஜய்யை கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர். அதிலும் முதல் தடவை தேர்தலில் போட்டியிடும் போதே ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? ரசிகர்களை கூட சந்திக்க விரும்பாத தளபதி என சோசியல் மீடியாவில் அலப்பறை கொடுத்து வருகின்றனர்.

ஆக மொத்தம் இந்த பிறந்தநாள் விஜய்க்கு நிச்சயம் மறக்க முடியாததாக மாறிவிட்டது. இதில் சில அரசியல் விசுவாசிகள் மற்றும் ஹீரோக்களின் ரசிகர்கள் என பலரும் குளிர் காய்ந்து வருகின்றனர்.

விஜய்யை அசிங்கப்படுத்தும் நெட்டிசன்கள்

Trending News