திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ஹீரோவாக விஜய்யின் வாரிசு.. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஒரே எதிரி தான் 

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் வாரிசு தற்போது சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தில் அப்பாவுக்கு ஏற்கனவே வில்லனாக நடித்து மிரட்டி விட்ட அதே நடிகர்தான் இப்போது பிள்ளைக்கும் எதிரியாக நடிக்கப் போறாராம்.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு தற்போது ஒரு  குறும்படத்தை இயக்கியிருக்கிறார். சமீபகாலமாகவே இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்காக நிறைய படங்கள் வந்து குவிகிறதாம். அதிலும் சமீபத்தில் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த உப்பெண்ணா என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

Also Read: விஜய் சேதுபதியை இயக்க வரும் மாஸ் ஹீரோவின் வாரிசு.. படு சீக்ரெட்டாக நடக்கும் வேலை

இந்த படத்தில் விஜய் மகன் ஜேசன் சஞ்சையை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடிகை கீர்த்தி ஷெட்டி  நடித்ததால், அவரே தமிழிலும் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் வில்லனாக நடித்து அக்கட தேசத்து ரசிகர்களை மிரளவைத்த விஜய் சேதுபதி தான், தமிழ் ரீமேக்கில் ஜேசன் சஞ்சைக்கும் வில்லனாக நடிக்க போகிறார்.

சொல்லப்போனால் இந்த படத்தை ஜேசன் சஞ்சயை வைத்து தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதி தான் அதிக ஆர்வம் காட்டுகிறாராம். இந்த படத்தில் நடிக்க ஜேசன் சஞ்சய் ஓகே சொல்ல வேண்டும் என தளபதி  ரசிகர்களும் ஆசைப்படுகின்றனர்.

Also Read: சஞ்சய் விஜய் இயக்கத்தில் துருவ் விக்ரம்.. இப்படி ஒரு காம்போ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

ஏனென்றால் குட்டி தளபதியை பெரிய திரையில் பார்த்து கொண்டாட அவர்கள் வெகு நாட்களாக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் ஜேசன் சஞ்சயை பொறுத்தவரை தன்னுடைய தந்தையை போல் நடிப்புத் துறைக்கு வராமல், தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகரை போல் இயக்குனராக  வரவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறாராம். 

இவருக்கு ஏற்கனவே பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அதில் நடிக்க மறுப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை அவருடைய மனநிலைமை இப்போது மாறி இருக்கலாம். இந்த படத்திற்கு ஓகே சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: சமூக வலைத்தளங்களில் போலியான கணக்கு.. பரபரப்பான அறிக்கை வெளியிட்ட தளபதி விஜய்

Trending News