செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசு மண்ணை கவ்வியதுன்னு யாருப்பா சொன்னா.? துணிவுக்கு போட்டியாக வசூலை அள்ளிய விஜய்

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் மோசமான விமர்சனங்களினால் வசூலில் பெருத்த அடி வாங்கி உள்ளதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வந்தது. அதாவது சமீபகாலமாக ஆக்சன் படங்களில் நடித்து வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்த விஜய்க்கு கடைசியாக வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனால் தன்னுடைய ஒரே ஸ்டைல் படங்களில் இருந்து தவிர்த்து குடும்ப செண்டிமெண்ட் படத்தை பண்ணலாம் என்று முடிவெடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக வெளியானது.

Also Read : விஜய்காக மட்டுமே வாரிசு படத்தில் நடித்தேன்.. மற்றபடி என்னுடைய கதாபாத்திரம் வேஸ்ட் தான்

வாரிசு படம் வெளியான முதல் நாளே சினிமா விமர்சனகர்களால் இந்த படத்திற்கு தொடர்ந்து மோசமான விமர்சனங்களை பரப்பி வந்தனர். வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இதனால் வசூலிலும் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது.

அதன்படி துணிவு படம் நல்ல வசூலை பெற்ற வந்த நிலையில் வாரிசு படம் வசூலில் மண்ணை கவ்வியதாக இணையத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் தவறுபடியாக்கும் படி இன்று வாரிசு படத்தின் வசூல் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது தமிழ்நாட்டில் துணிவு படத்தின் வசூல் தான் அதிகம் பெற்றுள்ளது.

Also Read : சூரியவம்சம் இல்ல, சிவாஜி படத்தின் அட்ட காப்பி தான் வாரிசு.. பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்

ஆனால் வெளிநாடு பொருத்தவரையில் விஜய்யின் வாரிசு படம் தான் வசூலை வாரிக் குவித்துள்ளது. அதன்படி ஏழாவது நாள் முடிவில் வாரிசு படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் படக்குழு அறிவிக்கும்.

வாரிசு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் இன்னும் சில தினங்களில் பல கோடிகள் குவிக்கும் என கூறப்படுகிறது. மேலும் விஜய்யை வைத்து தில் ராஜு பெத்த லாபம் பார்த்துள்ளார். விஜய் தற்போது வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படப்பிடிப்பில் ஆர்வமாக உள்ளார்.

Also Read : மோசமான விமர்சனத்தால் வீழ்த்தப்பட்ட வாரிசு.. விஜய்யின் மார்க்கெட்டை சரியா வைத்த வம்சி

Trending News