வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

16 நாட்களில் வாரிசு படத்தின் ஒட்டு மொத்த வசூல்.. ஆட்டநாயகனாக பாக்ஸ் ஆபிஸையே மிரட்டி விட்ட விஜய்

பொங்கலை முன்னிட்டு தல தளபதியின் துணிவு மற்றும் வாரிசு போன்ற 2 படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் இந்த இரண்டு படங்களில் எந்த படத்திற்கு அதிக வசூல் ஆகி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த இரண்டு படங்களின் வசூல் விவரம் அவ்வப்போது வெளியானாலும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல் தளபதி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. ஏனென்றால் 16 நாட்கள் முடிவில் இந்திய அளவில் விஜய்யின் வாரிசு திரைப்படம் 193.94 கோடியை அசால்ட்டாக வசூல் செய்திருக்கிறது.

Also Read: விஜய் நடுத்தெருவுக்கு வருவார், சாபமிட்ட மனைவி.. கேட்பார் பேச்சைக் கேட்டு தவறாக போகும் தளபதி.!

அதேபோல் வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலரை வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் குவித்திருக்கிறது. ஆக மொத்தம் உலக அளவில் தற்போது வரை வாரிசு படத்திற்கு 275.69 கோடி வசூல் செய்து மிரட்டி உள்ளது. அதிலும் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் என்ட்ரி ஆகி இருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் 300 கோடியை உலக அளவில் வசூலித்து மிரட்ட போகிறது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் ராஜு சொன்னது போல் தமிழகத்தில் நம்பர் ஒன் எப்போதுமே தளபதி விஜய் தான் என்று அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றன. மேலும் பக்கா குடும்ப செண்டிமெண்ட் படமான வாரிசு படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நாளுக்கு நாள் அதிக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதால் 500 கோடியுடன் தன்னுடைய வசூலை முடிக்கும் என்றும் படக்குழு மிகுந்த நம்பிக்கை காத்திருக்கிறது.

Also Read: தளபதி 67 ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜயின் வலது கை.. பூஜை நாட்களை டார்கெட் செய்து கல்லா கட்டும் லோகேஷ்

அதே சமயம் தற்போது மூன்றாவது வாரத்திலும் வாரிசு வசூலில் சோடை போகாமல், ‘விஜய் தான்  ஆட்ட நாயகன்’ என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறது. இருப்பினும் விஜய் இந்த வெற்றியை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் விஜய் மும்பை கேங்ஸ்டர் ஆக நடிக்க உள்ளதால் இவருக்கு ஏகப்பட்ட வில்லன்களை லோகேஷ் பிளான் பண்ணி வைத்திருக்கிறாராம். இவர்களின் மத்தியில் தளபதி 67 படத்தில் விஜய் எப்படி ஸ்கோர் செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: தளபதி 67 படத்தில் விக்ரம் இல்லையா!. பெரிய பிளான் போட்டிருக்கும் லோகேஷ்

Trending News