GOAT First Review: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போது ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பாக இருக்கிறது.
பொதுவாக விஜய் படங்களுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு அவருடைய படம் வெளி வருகிறது. அதனாலயே கோட் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அந்தப் பொறுப்பை உணர்ந்து கொண்ட தயாரிப்பு தரப்பும் கணக்கு பார்க்காமல் காசை வாரி இறைத்து படத்தை முடித்துள்ளனர். மேலும் இப்போது பிரமோஷன் வேலைகளும் படுஜோராக நடந்து வருகிறது.
எங்கு திரும்பினாலும் வெங்கட் பிரபுவின் பேட்டி தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அவர் படம் பற்றிய பல புது தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கோட் படம் எப்படி இருக்கிறது என UK விநியோகஸ்தர் தன் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
கோட் முதல் விமர்சனம்
படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஆஹா ஓஹோ என பாராட்டிய நிலையில் 15 வயதுக்கு மேற்பட்டோர் படத்தை பார்க்கலாம் என சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இருந்து பரபரப்பும் விறுவிறுப்பாக நகர்கிறது.
மூன்று மணி நேரம் படத்தின் நீளமாக இருந்தாலும் எந்த இடத்திலும் போர் அடிக்கவே இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலுடன் ஒவ்வொரு காட்சியும் நகர்கிறது. அதேபோல் விஜயின் மூன்று விதமான கெட்டப்பும் வேற லெவலில் இருக்கிறது.
மேலும் ஆக்ஷன் காட்சிகள், ஏ ஐ தொழில்நுட்பம் மற்றும் பிற டெக்னாலஜி என அனைத்தும் நிச்சயம் ரசிகர்களை கவரும். அதனால் விஜய், வெங்கட் பிரபுவின் கூட்டணி நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் என விமர்சனம் வந்துள்ளது.
இதனால் தளபதியின் ரசிகர்கள் இப்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உலக அளவில் கோட் 15 கோடி வரை வசூலித்திருக்கிறது. ஏற்கனவே படத்தின் பிரீ பிசினஸ் போட்ட பட்ஜெட்டை தாண்டி லாபத்தை கொடுத்திருக்கிறது. இதில் சென்சார் அதிகாரிகளின் விமர்சனமும் படத்திற்கு பிரமோஷன் ஆக அமைந்துள்ளது.
பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி கோட்
- வெங்கட் பிரபு செய்யும் தில்லாலங்கடி வேலை
- GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் இல்லை, வெங்கட் பிரபு பேட்டி
- பிரசாந்த், விஜய்யின் ஆதிக்க அலையில் கரையேறிய AK