கோட் படம் சூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரோடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. விஜய் எப்பொழுதும் படத்தின் ஆடியோ லான்ச்களில் பேசும் பொழுது ஒரு குட்டி கதை சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்துவார். ஆனால் இந்த முறை அதற்கு வாய்ப்பு இருக்கிறது தமிழ்நாட்டில் இல்லை, வெளிநாட்டில்.
விஜய்யுடன் கோட் படத்தில் மைக் மோகன், பிரசாந்த் அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், சினேகா, பிரபுதேவா லைலா, ஜெயராம், ஹீரோயினாக மீனாட்சி சௌவுத்ரி நடிக்கிறார். எப்படியும் இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹீட் கொடுக்க வேண்டும் என வெங்கட் பிரபு செதுக்கி வருகிறார்.
குட்டி கதைக்கு எல்லாம் குட்பை சொல்லும் தளபதி
விஜய் கட்சி ஆரம்பித்ததால் ஆடியோ லான்ச் தமிழ்நாட்டில் தான் வைப்பார்கள். அப்படி வைக்கும் பட்சத்தில் அவர் கட்சிக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது ஆடியோ லாஞ்சுக்கு மூன்று இடங்களை பார்த்துள்ளனர்.
வெறும் ஆடியோ லான்ச் மட்டுமாக இல்லாமல், படத்தின் வியாபாரத்துக்கும் உதவும் படி செய்ய வேண்டும் என்று வெங்கட் பிரபுவும், விஜய் திட்டம் திட்டி வருகின்றனர்.. இப்பொழுது ஆடியோ லாஞ்சிக்கு துபாய், சிங்கப்பூர் மலேசியா என மூன்று இடங்களை தேர்வு செய்துள்ளனர். கடைசியாக மலேசியாவை உறுதி செய்துள்ளனர்.
இந்த ஆடியோ லான்ச் விழா ஆகஸ்ட் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளிலும் கோட் படத்தின் பிசினஸை இரட்டிப்பாக தான் இந்த ஏற்பாடு. ஏற்கனவே இந்த படத்தின் சேட்டிலைட் உரிமை 93 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி உள்ளது.