செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய்யை மிரட்டி நடிக்க வைத்த சசிகலா.. 20 வருடங்களுக்கு முன் பணிந்து போன தளபதி

Actor Vijay: விஜய் இப்போது எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்கிறார். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு விஜய்யின் நிலைமை வேறாகத்தான் இருந்தது. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே அவரது படங்களை வெளியிட பல பிரச்சனைகளை சந்தித்தார். அவருடைய ரசிகர்களால் மட்டுமே இப்போது தளபதி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு செய்யும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.

Also Read : மேடையில் அட்லி பூரிப்பில் பேசியதை துண்டாக தூக்கிய சன் டிவி.. விஜய் மீது இப்படி ஒரு கொலை வெறி தாக்குதலா!.

இந்த சூழலில் 20 வருடங்களுக்கு முன்பு சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்து விஜய் ஒரு படத்தில் நடித்ததாக வலைப்பேச்சு அந்தணன் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். அதாவது தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு இவர்கள் பல படத்தில் நடித்துள்ளார்கள்.

அந்த வகையில் கடைசியாக விஜய் மற்றும் சினேகா இணைந்து நடித்த படம் வசீகரா. செல்வ பாரதி இயக்கத்தில் உருவான வசீகரா படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கதையை முதலில் விஜய் இடம் கூறியபோது அதில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகு சசிகலா கேட்கிறார், நீங்கள் கால்ஷீட் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று மிரட்டல் வந்திருக்கிறது.

Also Read : கல்யாணம் முடிந்த கையுடன் முடிவுக்கு வரும் சீரியல்.. விஜய் டிவியின் மொத்த டிஆர்பிக்கும் சங்கு ஊதிட்டாங்க!

அப்போது சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அரசியல் பிரபலங்களின் ஆதரவும் தேவை. இதனால் தனக்கு விருப்பமில்லை என்றாலும் வசீகரா படத்தில் விஜய் நடித்தார் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் இவ்வாறு பணிந்து போய் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகத்தான் இருக்கிறது.

ஆனால் அப்போது அரசியல் ஆளுமைகளுக்கு பயந்த விஜய் இப்போது அரசியலுக்கு வர இருக்கிறார். அதற்காக பல உதவிகளை செய்து வருகிறார். மேலும் விஜய் அரசியலுக்கு வருவதால் மற்ற கட்சி தலைவர்கள் இப்போது அச்சத்தில் இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் விஜய் அப்போது ஒரு கட்டாயத்திற்கு உட்பட்டதால் தான் அவருக்கு அரசியலில் வருவதற்கு எண்ணம் தோன்றியதோ என்னவோ.

Also Read : ரோலக்ஸ் வைத்து கனவை நினைவாக்கும் லோகேஷ்.. உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்கப் போகும் விஜய்

Trending News