செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினியின் மிகப்பெரிய தோல்வியை கொண்டாடிய அப்பா, மகன்.. விஜய்யை திரும்ப வச்சு செய்த கர்மா!

தமிழ் சினிமாவில் 3 தலைமுறையாக சூப்பர் ஸ்டாராக ஆட்சி செய்து வருகிறார் ரஜினி. இதை மாற்றியமைக்க எந்த நடிகராலும் இன்றுவரை முடியவில்லை, எந்த நடிகரை கேட்டாலும் நான் ரஜினி ரசிகன் என்று பெருமையாக கூறி தான் தன் நடிப்பை தொடர்வார்கள். அந்த அளவிற்கு ரஜினி மீது அனைவருக்கும் மரியாதை இருக்கிறது.

அந்த வரிசையில் விஜய்யும் அப்படித்தான் நடிக்கும் காலகட்டத்தில் இருந்து இன்று வரை நான் ரஜினியின் தீவிர ரசிகன் என்று சொல்லி இன்று அவர் ரஜினியை தாண்டி சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். ரஜினிக்கு அடுத்து அனைத்து மக்களும் விரும்பக்கூடிய நபராக விஜய் இன்றும் இருந்து வருகிறார்.

Also Read : பொங்கலுக்கு வாரிசு வெளிவர வாய்ப்பே இல்ல.. வம்சி தலையில் இடியை இறக்கிய திரை பிரபலங்கள்

ஆனால் பாபா படம் வெளிவந்த சமயத்தில் அந்த படம் ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வியை கெட்ட பெயர்களையும் உருவாக்கியது. அந்த சமயத்தில் அந்தத் தோல்வியை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து சந்தோஷப் படுத்தினார்கள் நடிகர் விஜய்யும் அவரது அப்பா சந்திரசேகரும் இதில் உண்டு என செய்யாறு பாலு கூறி உள்ளார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி விஜய் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அதற்கு அடுத்து வந்த சந்திரமுகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் வந்த விஜய் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது பயத்தில் இருந்த விஜய் வேறுவழியில்லாமல் சந்திரமுகி வெற்றி விழாவின்போது ரஜினியை பாராட்டி பேசினார். ரஜினி எதிர்த்தால் சினிமாவில் சாதிக்க முடியாது என்று தெரிந்து இப்படி மாறிவிட்டார் விஜய்.

Also Read : தளபதி 67ல் படத்துல என்ன டம்மி பீட்சா ஆகிடுவாங்க.. ஷோகேஷ் போட்ட ஸ்கெட்சில் மிஸாகும் 5வது வில்லன் நடிகர்

ஆனால் அதன் கர்மா இப்பொழுது விஜய் குடும்பத்தில் விளையாடி வருகிறது. மகன் மிகப் பெரிய நடிகனாக மாறி 120 கோடி சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் விஜய்க்கும், சந்திரசேகரும் சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். சந்திரசேகர் பெயரைக் கேட்டாலே கோவப்படும் அளவிற்கு விஜய்  வந்துவிட்டார், தனியாக வாழ்ந்து வருகிறார்.

சந்திரசேகர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தனியாக ஜாலியாக ஊர்சுற்றி அதை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். மகன் பெரிய நடிகராக இருந்தும் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்தும் அவர்களுடன் வாழ முடியாமல் சந்திரசேகர் தனியாக சுற்றி வருகிறார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த அளவிற்கு இவர்கள் செய்த பாவம்தான் கர்மாவாக மாறி இவர்களை கஷ்டப்படுகிறது என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Also Read : விஜய் 130 கோடி எல்லாம் ஒரு சம்பளமா? எம்ஜிஆரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆவேசமாக பேசிய எஸ்ஏசி

Trending News