திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நீலாங்கரை வீட்டு பக்கமே போகாத விஜய்.. சேர்ந்திருக்கும் சேர்க்கை அப்புடி

Thalapathy Vijay: பொதுவாக ஒரு மனிதனின் நடவடிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மாறுகிறது என்றால் அவர் யாருடன் சேருகிறார் என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதை இன்னும் எளிமையாக புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் சேர்க்கை சரியில்லை என்று சொல்ல வேண்டும். அப்படி தான் தளபதி விஜய் இப்போது சேர்க்கை சரி இல்லாமல், தலைகால் புரியாமல் சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

தளபதி 68 படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிந்து , இரண்டாவது கட்ட ஷூட்டிங் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. அதை தொடர்ந்து விஜய், கேப்டன் விஜயகாந்த் இறந்ததற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது அவர் தாய்லாந்தில் இருந்ததாக சொல்லப்பட்டது. உண்மையில் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னையில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு GOAT என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தாய்லாந்து நாட்டில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, மூன்றாம் கட்டமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பகுதியில் இரண்டு பங்களாக்களை வாடகைக்கு எடுத்து சூட்டிங் நடத்தி வருகிறார்கள்.

Also Read:கலைஞர் 100 விழாவுக்கு ஆஜரான ரஜினி கமல்.. சென்னையில் இருந்துக்கிட்டே புறக்கணித்த அஜித், விஜய்

கிழக்கு கடற்கரை சாலை பகுதி ஏற்கனவே கேளிக்கைகளுக்கு பேர் போனது. அதிலும் கோவளம் பகுதியில் தான் அதிகமான நட்சத்திரங்கள் தங்களுடைய பொழுதை போக்குவார்கள். தற்போது படப்பிடிப்பு அங்கு நடப்பதால், தளபதி 68 பட குழுவிற்கு கொண்டாட்டமாக இருக்கிறது. மொத்த பட குழுவும் கோவளம் பகுதியில் பயங்கரமாக லூட்டி அடித்து வருகிறார்கள்.

வீட்டு பக்கமே போகாத விஜய்

கோவளம் பகுதியில் இருந்து 20 நிமிடத்தில் விஜய் இருக்கும் நீலாங்கரை வீட்டிற்கு வந்துவிடலாம். ஆனால் விஜய் வீட்டிற்கு போவதே கிடையாதாம். அந்த பங்களாவிலேயே ஜாலியாக பொழுதை கழிக்கிறாராம். விஜய் பொதுவாக தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். தற்போது அவர் இணைந்திருக்கும் கூட்டணி வெங்கட் பிரபு உடையது. இதனால் தான் சேர்க்கை சரி இல்லாமல் சேட்டைகளில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் தளபதி.

தற்போது பொங்கலுக்காக ஒரு வாரம் விடுமுறை கொடுக்க திட்டமிட்டு இருக்கிறது தளபதி 68 பட குழு. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படபிடிப்பு ராஜஸ்தான், ஸ்ரீலங்கா, இஸ்தான்புல் பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த படம் சயின்ஸ் பிக்சன் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. பிரபல நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி மேன் படத்தின் கதை தழுவல் தான் இது என சமீபத்தில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

Also Read:சங்கரை மிஞ்சும் அளவிற்கு GOAT படத்தை செதுக்கும் வெங்கட் பிரபு.. இந்த கதை விஜய்க்கு செட் ஆகுமா?

Trending News