திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சாட்டை எடுத்து நாட்டை திருத்து.. ரஜினி அஜித் செய்யாததை செய்து காட்டிய விஜய்

#Justiceforaarthi: நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் என்பது அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பவும் குதூகலமான ஒரு விஷயம்தான். ஆனால் உண்மையில் 90ஸ் கிட்ஸ்களாக அவரை ஒரு நடிகராக ரசித்தவர்களுக்கு விஜய்க்கு அரசியலா, அது எப்படி செட்டாகும் என்ற ஒரு சின்ன சந்தேகம் இப்போது வரை மனதை உறுத்திக் கொண்டிருக்கும் நெருடலான விஷயம்தான். ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் சத்தமாக பேசி கூட பார்த்ததில்லை.

விஜய் தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதே பெரிய அதிர்ச்சி தான். அப்படி இருக்கும் பொழுது மௌனம் ஒன்றையே தன்னுடைய ஆயுதமாக இத்தனை வருடம் உபயோகித்துக் கொண்டிருந்த விஜய்க்கு அரசியல் மேடை எப்படி கை கொடுக்கும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தலைவா எல்லா ஏரியாவிலும் நான் கில்லி என்பதே சொல்லாமல் சொல்லி வருகிறார் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும்.

அரசியல் அறிவிப்புக்குப் பிறகு அவர் நடத்திய ஒவ்வொரு பொதுக் கூட்டங்களாக இருக்கட்டும், தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தடுத்த நகர்வுகளாக இருக்கட்டும் இவர் ஒரு திட்டத்துடன் தான் உள்ளே இறங்குகிறார் என்பதை தெரியப்படுத்துகிறது. அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் ரஜினி செய்யாத விஷயத்தை இப்போது விஜய் செய்து மக்கள் ஆதரவை இன்னும் பெற்றிருக்கிறார்.

Also Read:விஜய், அஜித் வாரிசுகளுக்கு போட்டியான குட்டி சூர்யா.. ஜோவை உரித்து வைத்திருக்கும் தியாவின் வைரல் போட்டோ

சிறுமி ஆர்த்தியின் மரணம் புதுச்சேரியை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி கொண்டு இருக்கிறது. பத்தோடு பதினொன்றாக, போக்சோ சட்டத்தை மட்டும் போட்டு இந்த கேசை முடித்து விடக்கூடாது என்பதில் புதுச்சேரி மக்கள் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமியாக இருக்கட்டும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆக இருக்கட்டும் பெரிய அளவில் இதற்கான தண்டனையை பெற்று தருவோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சூட்டிங்கிலும், பார்ட்டிகளிலும் பிசியாக இருக்கும் எந்த ஒரு நடிகர்களும் இந்த சிறுமிக்கு நடந்த கோர விபத்தை பற்றி பேச தயாராக இல்லை. ஆனால் நடிகர் விஜய் நேற்று சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அத்தோடு மட்டுமில்லாமல் இந்த கொலைக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி தருவதற்கு பாண்டிச்சேரி மாநில அரசையும் வலியுறுத்தி இருக்கிறார்.

பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் என விஜய் பட பாடல் ஒன்று வரும். இப்போது அதை விஜய் தன்னுடைய உண்மையான வாழ்க்கையிலும் நிரூபித்து இருக்கிறார். ஒரு சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து கேள்வி கேட்பதுதான் ஒரு தலைவனின் முதல் அடையாளம். அதை விஜய் தைரியமாகவும், சிறப்பாகவும் செய்திருக்கிறார். ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி கொண்டிருக்கும் ரஜினி மற்றும் அஜித் போன்றவர்கள் ஏன் இது போன்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்காமல் மௌனம் காக்கிறார்கள் என்பது தான் பெரிய வியப்பாக இருக்கிறது.

Also Read:மக்கள் பணின்னா இப்படித்தான் இருக்கணும்.. ஆட்சியை பிடிக்கும் முன்பே ஆட்டம் காண வைக்கும் விஜய் வெற்றிக் கழகம்

Trending News