திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

Mahanadhi: காவேரியிடம் மொத்த ஆசையும் கொட்டி தீர்த்த விஜய்.. கொடைக்கானலில் இருக்கப் போகும் டாம் அண்ட் ஜெர்ரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரியை காணவில்லை என்றதும் விஜய் ரொம்பவே பதட்டத்துடன் எல்லா பக்கமும் தேடி அலைகிறார். பதட்டம் என்பதை விட காவேரி இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்ற வேதனை தான் அவரை அந்த அளவிற்கு படாதபாடு படுத்தி எடுத்து இருக்கிறது.

அதற்காக காவேரி அம்மாவிடம் மறைமுகமாக கேட்டுக்கொண்டார். அப்படியே குமரன் கடையிலும் போய் விசாரித்தார். கடைசியில் காவிரியின் தோழி இடம் போய் கேட்டார். அதற்கு அவர் காவிரிக்கு இங்கே விட கொடைக்கானல் தான் அதிகமான பிரெண்ட்ஸ் இருக்கிறார்கள். அதனால் அங்க போய் பார்த்தால் கண்டிப்பாக காவிரியை நீங்கள் பார்த்துவிடலாம் என்று சொல்கிறார்.

காவேரியை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட விஜய்

அதன்படி காவிரியை தேடிக்கொண்டு விஜய் கொடைக்கானலுக்கு போகிறார். போகும் போதே நவீனிடமும் கேட்டால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்று போன் பண்ணி கூப்பிடுகிறார். ஆனால் நவீனை சந்தித்த பொழுது ராகினி நிச்சயதார்த்தம் நின்னுவிட்டது என்று கேள்விப்பட்டேன் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் அப்படிப்பட்ட பொன்னு உங்க வீட்டுக்கு வந்தால் உங்கள் வீடே ரெண்டாகி விடும் என்று நவீன் சொல்கிறார்.

இதை கேட்டதும் விஜய்க்கு காவேரி பற்றி இவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்து காவிரியை காணவில்லை என்று எதுவும் சொல்லாமல் அப்படியே கிளம்பி விட்டார். பிறகு கொடைக்கானலுக்கு போன விஜய், காவிரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டார். அந்த நொடியில் காவிரியை பார்த்த சந்தோஷத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் காவிரியை கட்டி பிடித்து அடக்கி வைத்திருந்த மொத்த ஆசையும் கொட்டி விட்டார்.

பிறகு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டோம் என்று தெரிந்து கொண்டு காவிரியிடம் சண்டை போட ஆரம்பிக்கிறார். எங்களிடம் சொல்லாமல் நீ எங்கே போனாய் என்று கேட்க, அதற்கு காவிரி நான் லெட்டரில் எழுதி வைத்து தானே வந்தேன் என்று சொல்கிறார். உடனே விஜய், நீ கொடைக்கானலுக்கு போகிறேனா எழுதி வைத்தாய், இல்லல்லா.

நீ ஏதும் சொல்லாமல் போனால் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா என்று விஜய் சொல்கிறார். அதற்கு காவிரி நீங்க ஏன் பயப்படனும். நான் தான் உங்க வீட்டில் இருந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பயமாக இருக்கிறது என்று சொன்னீங்க. அதனால தான் நான் வந்து விட்டேன். எப்படி இருந்தாலும் எட்டு மாதத்திற்கு பிறகு நாம் பிரிய வேண்டும். அதற்கு இப்பொழுது நான் தனியாக வந்து விட்டேன்.

இதுதான் சான்ஸ் என்று உங்க குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏதாவது சொல்லி சமாளித்து இருக்கலாம் என்று காவேரி விஜயிடம் கூறுகிறார். பிறகு தாத்தாவிற்கு போன் பண்ணி விஜய், காவேரி கிடைத்துவிட்டார் என்று சொல்கிறார். உடனே தாத்தா காவேரியிடம் பேசும் பொழுது நீ இல்லை என்றதும் விஜய் எந்த அளவுக்கு துடித்துப் போய்விட்டான் என்று தெரியுமா? தயவு செய்து இனி அவனை விட்டுவிட்டு போகாதே என்று சொல்கிறார்.

பிறகு வாங்க போகலாம் என்று காவேரி கூப்பிடும் பொழுது, விஜய் இப்பொழுது தான் நான் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து வந்திருக்கிறேன். எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேண்டும். அதனால் இரண்டு நாள் கொடைக்கானலில் இருந்துவிட்டு நாம் போகலாம் என்று சொல்கிறார். கடைசியில் இவர்கள் இருவரும் சேர்ந்து கொடைக்கானலில் லூட்டி அடிக்கப் போகிறார்கள். அத்துடன் இவர்களுடைய டாம் அண்ட் ஜெர்ரி சண்டையும் தொடர போகிறது.

- Advertisement -

Trending News