செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

துணிவால் உச்சகட்ட பயத்தில் இருக்கும் வாரிசு.. படத்தை ஓட்டியே ஆகவேண்டும் என விஜய் செய்த ராஜதந்திரம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பைலிங்குவல் திரைப்படமாக உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதே நாளில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படமும் வெளிவர இருக்கிறது. இந்த விஷயம் தான் கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகின் முக்கிய பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறது.

இரு பெரும் நடிகர்கள் நேருக்கு நேர் பல வருடங்கள் கழித்து மோத இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் துணிவு திரைப்படத்தை வாங்கி இருப்பதும் முக்கிய ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.

Also read: ரசிகர்களை ஏமாற்றிய அஜித்.. துணிவு படமே இன்னும் முடியலையாம், அதுக்குள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளா?

ஏனென்றால் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை கைப்பற்றி இருப்பதால் துணிவு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அப்படி இருக்கும் போது வாரிசு திரைப்படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த ரேஸில் அஜித் வெற்றி பெறுவார் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

இந்நிலையில் விஜய் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை பனையூர் அலுவலகத்தில் திடீரென சந்தித்து பேசி இருப்பது பரப்பரப்பை கிளப்பியுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் இப்படி ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்துள்ளார். வாரிசு திரைப்படத்தை நினைத்து வந்த பயம்தான் அதற்கு காரணம் என்ற விமர்சனமும் இப்போது எழுந்துள்ளது.

Also read: ரெட் ஜெயிண்ட்டை எதிர்த்து களத்தில் குதித்த பிரபல நிறுவனம்.. சொன்ன தேதியில் மோதிப் பார்க்க ரெடியான வாரிசு

முன்பே கூறியது போன்று துணிவு திரைப்படத்தால் விஜய் தற்போது உச்சகட்ட பயத்தில் இருக்கிறார். அதனாலேயே அவர் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசி அதன் மூலம் வாரிசு திரைப்படத்தை வெற்றியடைய வைக்க பிளான் செய்திருக்கிறார். மேலும் விஜய்யை சந்தித்த சந்தோஷத்தில் ரசிகர்களும் வாரிசு திரைப்படத்தை வெற்றி பெற வைக்க தற்போது தீயாக உழைக்க தயாராகி விட்டனர்.

அது மட்டுமல்லாமல் இந்த சந்திப்பில் ரசிகர்களை உற்சாகப்படுத்த பிரியாணி விருந்தும் தடபுடலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு ராஜதந்திரத்தை அரங்கேற்றி இருக்கும் விஜய்யின் பிளான் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும். அந்த வகையில் இந்த பந்தய முடிவில் எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை காணவும் திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: வைரலாகும் அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம்.. பக்கா ஜென்டில்மேன் என மீண்டும் நிரூபித்த தல!

Trending News