ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

ஒன்றிய அரசை பதம் பார்க்கப் போகும் விஜய்.. தலைமை தாங்கும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மூத்த தலைவர்

தளபதி விஜயின் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் தற்போது படத்திற்கான பிரமோஷன் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முதல் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் நேற்று இந்த படத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தனது ரசிகர் மன்றத்தை கூட்டி இருந்தார். இதற்கு காரணம் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் தான் என கூறப்பட்டது. ஆனால் விஜய் இரண்டு முறை ரசிகர் மன்றம் கூட்டியதற்கு காரணம் அரசியல் சம்பந்தமான கூட்டமாம். விஜய் அரசியலில் வரப்போகிறார் என பலமுறை செய்தி வெளியானது.

Also Read : டாம் குரூஸுக்கே சவால் விடப் போகும் விஜய்.. பார்த்து உருட்டுங்க பாஸ் மிஸ் ஆச்சுன்னா தலைமுடி கூட மிஞ்சாது

இதனால் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்ஏசிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த சூழலில் மிக தீவிரமான வேகத்தில் விஜய் அரசியலில் இறங்க இருக்கிறாராம். இதற்கு அரசியலில் மூத்த தலைவர் ஒருவரின் அறிவுரையால் ஆலோசனைகளை விஜய் பெற்றுள்ளாராம்.

மேலும் இப்போதே விஜய் அதற்கான முன்னேற்பாடுகளாக தொகுதி வாரியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரெடியாகிவிட்டாராம். இதைக் கேட்ட அந்த மூத்த தலைவரே தற்போது அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். சமீபத்தில் விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தியது.

Also Read : விஜய்யை வாண்டடா வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. ரெய்டிற்கு பிறகு புலி பாயுமா? பதுங்குமா?

அதுமட்டுமின்றி விஜய் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்ததால் ஒன்றிய அரசு மீது மிக கோபத்தில் இருக்கிறார். ஆகையால் வருகின்ற மக்களவைத் தேர்தலில் அரசியலில் இறங்க விஜய் முடிவெடுத்துள்ளாராம். இதனால் இந்த முறை விஜய் போட்டியிட உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை பக்காவாக பிளான் செய்து ரெடியாக இருக்கிறார் விஜய். மேலும் கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்தச் செய்தியை அறிந்த பெரிய அரசியல் தலைவர்களே தற்போது உச்சகட்ட பயத்தில் உள்ளார்களாம். ஏனென்றால் விஜய் அரசியலில் வந்தால் பெரிய மாற்றம் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read : அவர் பேச்சை கேட்டு அப்பாவை டீலில் விட்ட விஜய்.. சைலன்டாக வேலை பார்த்த மனைவி

Trending News