செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வம்சியின் மெத்தனத்தால் கடுப்பில் இருக்கும் விஜய்.. ஆசையில் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க!

தில்ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் இப்போது ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார். எதற்காக இந்த டீமுக்கு படம் பண்ண சம்மதித்தோம் என்று அவரே நொந்து போகும் அளவுக்கு ஒவ்வொரு விஷயங்களும் நடந்து வருகிறது. ஏற்கனவே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தார்.

அதன் காரணமாகவே விஜய் புத்தாண்டு தினத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்று எக்கச்சக்கமாக பிளான் போட்டிருந்தார். அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலரை வெளியிடுவதற்கான அத்தனை வேலைகளையும் பட குழு மும்முரமாக செய்து வந்தது. ஆனாலும் குறிப்பிட்ட தினத்தில் அவர்களால் அந்த ட்ரெய்லரை வெளியிட முடியவில்லை.

Also read: வாரிசுக்கு துணிவு காட்டிய பயம்.. அதிரடியாக விஜய் போட்ட கட்டளை

புத்தாண்டு தினமான நேற்று காலை முதலே விஜய் ரசிகர்கள் வாரிசு ட்ரெய்லரை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம். சொல்லப்போனால் இந்த ஏமாற்றம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் விஜய்க்கும் தான் இருந்திருக்கிறது. பட குழு கடைசி நேரத்தில் இப்படி சொதப்புவார்கள் என்பதை அவரே அறியாதது தான்.

ஆரம்பத்திலிருந்து படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், இசை வெளியீட்டு விழா என்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்த வாரிசு டீம் ட்ரெய்லர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டார்கள். இதற்கு முழுக்க முழுக்க காரணம் இயக்குனர் வம்சி மட்டுமே. ஏற்கனவே அவர் படத்தை குறிப்பிட்ட தேதியில் எடுத்து முடிக்காமல் இழுத்தடித்து வந்தது விஜய்யை கோபப்பட வைத்தது.

Also read: விஜய்க்கு பதிலடி கொடுத்த அஜித்தின் டயலாக்.. அட இதுல இவளோ விஷயம் இருக்கா?

இருந்தாலும் அவர் பொறுமையாக கூடுதல் தேதிகளை ஒதுக்கி கொடுத்து படப்பிடிப்பை முடித்தார். மேலும் வம்சியும் படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருவதாக விஜய்க்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ஆனாலும் வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ் சில தடைகளால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் படத்தின் சென்சார் சான்றிதழ் வாங்குவதில் சிறு தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு தான் ட்ரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று இப்போது பேசப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் ட்ரைலரில் பட ரிலீஸ் குறித்த தேதியும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். இப்போது செம டென்ஷனில் இருக்கும் விஜய் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற பதட்டத்திலும் இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் அவசர அவசரமாக இறுதி கட்ட வேலைகளை பார்த்தால் ஏதாவது சொதப்பிவிடும் என்ற பயம் படகுழுவினருக்கே இருக்கிறது. இந்நிலையில் சத்தமில்லாமல் ட்ரெய்லரை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள துணிவு, வாரிசு டீமுக்கு ஒரு பயத்தை காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: வாரிசை விட மிகக் குறைவான நேரத்தில் முடிக்கப்பட்டது துணிவு.. ஆபத்தாக அமையும் நெடு நீளப் படங்கள்

Trending News