புதன்கிழமை, ஜனவரி 22, 2025

காவிரி மீது இருக்கும் தீராத காதல், அடங்கிப்போன விஜய்.. ராகினியை டம்மி ஆக்கிய புருஷன்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய்யிடம் எந்த கேள்வியும் கேட்காமல் காவிரி, தன் குடும்பத்திற்காக விஜய்யை வைத்து அப்பள பிசினஸில் மார்க்கெட்டிங் பண்ண பயன்படுத்திக் கொண்டார். அத்துடன் விஜய் அப்பளத்திற்கு கொடுத்த விளம்பரத்தை ஊர் முழுவதும் போஸ்ட் எடுத்து ஒட்டி விடுகிறார்.

இதனால் நடைபயிற்சிக்கு போகும் பொழுது விஜய்யை அனைவரும் நக்கலாக பார்த்து சிரித்தார்கள். எல்லோரும் ஏன் இப்படி நம்மளை பார்த்து சிரிக்கிறார்கள் என்று யோசித்து நிலையில் விஜய், போஸ்டர் பார்த்து ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார். அதை கிழித்துக்கொண்டு காவரிடம் கோபமாக பேசிய விஜய்யை காவேரி கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்தி வருகிறார்.

ராகினி அஜய்யை கல்யாணம் பண்ணியது வேஸ்ட்

அந்த வகையில் இருவரும் ஆபீசுக்கு போனபொழுது அங்கேயும் விஜய்யிடம் தொடர்ந்து அப்பளத்தில் விளம்பர கொடுத்ததை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. உடனே காவிரி அனைவரையும் சரி செய்து இதைப்பற்றி விஜய் இடம் கேட்கக்கூடாது என்று பூசி மொழுகி விட்டார். ஆனாலும் தொடர்ந்து விஜய்க்கு போன் மற்றும் பார்ட்னஸ் அனைவரும் போன் பண்ணி நக்கல் அடித்து பேசினார்கள்.

பிறகு காவேரி, விஜய்யை சமாதானப்படுத்தி இனி இந்த மாதிரி பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டார். வீட்டிற்கு வரும் இவர்கள் தாத்தாவுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது விஜய் மறுபடியும் இந்த ஒரு விஷயத்தை வைத்து புலம்ப ஆரம்பிக்கிறார். அப்பொழுது தாத்தா, காவிரிக்கு சப்போர்ட்டாக பேசும் விதமாக இதே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் வேறு ஒரு ட்ராக்குக்கு மாத்தி விட்டார்.

ஆனாலும் விஜய்க்கு இருந்த கொஞ்சம் கோபம் சாப்பிடாமலே பாதியிலேயே போய்விட்டார். மனதிற்குள் கோபம் எரிச்சல் இருந்தாலும் காவிரி மீது இருக்கும் தீராத காதலால் ரொம்பவே கடுமையாக நடந்து கொள்ளாமல் கோபமும் படாமல் பட்டும் படாமல் பேசிவிட்டார் விஜய். அது காவேரி மீது இருக்கும் காதல்தான் அவரை அடங்கி போக வைத்திருக்கிறது.

இதையெல்லாம் பார்த்த ராகினிக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. உடனே அஜய்யிடம் போய், இப்படியே இங்க உக்காந்து இருந்தா எப்படி முன்னேற முடியும். ஆபீஸ்க்கு போய் வேலையெல்லாம் பார்க்கிற ஐடியாவே இல்லையா என்று கேட்கிறார். அதற்கு அஜய், அதான் விஜய் அண்ணா என்னை ஆபீஸ் பக்கம் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

அதையும் மீறி எப்படி போக முடியும் என்று ராகினிடம் அஜய் கேட்கிறார். அதற்கு ராகினி, நம்ம போவோம் அப்படி என்னதான் நடக்குன்னு போய் பார்ப்போம். இப்பொழுது நாம் இருவரும் சேர்ந்து ஆஃபீஸ்க்கு போகலாம் என்று அஜய்யை கூப்பிடுகிறார். ஆனால் அஜய் போனால் நமக்கு மறுபடியும் அடி தான் விழும் என்ற பயத்தில் ராகினியை சமாளித்து டைவர்ட் பண்ணுகிறார்.

உடனே ராகினியும் அஜய் பிளான் எதுவும் புரியாமல் காவிரி குடும்பம் இங்கே இருப்பதே எனக்கு பிடிக்கவில்லை. அதனால் முதலில் அவர்களை இங்கிருந்து வெளியே விரட்ட வேண்டும் என்று ராகினியை டைவர்ட் பண்ணி அந்த வேலையை பார்க்க வைத்து விட்டார். இது எதுவும் புரியாத ராகினி, காவிரி குடும்பத்தையும் ஒன்னும் பண்ண முடியாமல் கடைசியில் டம்மியாக தான் நிற்கப் போகிறார். அதாவது விஜய், காவிரிக்கு சப்போர்ட் பண்ணும் வரை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News