Udhayanidhi : முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக அரசை விமர்சிக்கும் படி நேற்று விஜய் மேடையில் சரமாரியான கேள்விகளால் அரங்கை அதிர செய்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழலில் உதயநிதிக்கு அஸ்திவாரம் போட்டதே விஜய் தான். இப்போது அவர் ஆலமரமாக வளர்ந்து நிற்க காரணம் விஜய் என்று விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
அதாவது உதயநிதி அரசியலைப் போல் சினிமாவிலும் விநியோகஸ்தராக கொடிகட்டி பறந்து வருகிறார். அவர் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தொடங்கி முதல் படம் தயாரித்தது விஜய்யின் குருவி தான்.
உதயநிதியை வளர்த்து விட்ட விஜய்
அதன் பிறகு தான் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். அதேபோல் விநியோகஸ்தராக படங்களை தியேட்டரில் வெளியிட்ட நிலையில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய படங்களை தமிழ்நாட்டில் உதயநிதி தான் வினியோகம் செய்தார்.
உதயநிதியின் வளர்ச்சிக்கு வித்திட்டவராக விஜய் இருக்கிறார். தனக்கு தேவை என்ற போது பயன்படுத்திக் கொண்ட விஜய் இப்போது உதயநிதியையும் அவரது அரசையும் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்று பலரும் கூறுகின்றனர்.
மேலும் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் முன்பே வந்திருக்க வேண்டும். பணம் மற்றும் புகழை சம்பாதித்து விட்டு இப்போது பதவிக்கு ஆசைப்பட்டு வந்திருக்கிறார். இது மக்களிடத்தில் செல்லுபடி ஆகாது என விஜய்யை பற்றிய அடுத்த அடுத்த விமர்சனங்கள் வருகிறது.