வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோ படத்தில் லோகேஷ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. செண்டிமெண்டாக தாக்கிய தளபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் மீதமுள்ள காட்சிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்பொழுது வரை ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணம் லோகேஷ் மற்றும் விஜய் இவர்கள் கூட்டணியில் தயாராகும் படம் என்பதால் தான்.

அதற்கு ஏற்ற மாதிரி ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக தினமும் ஒரு அப்டேட்டை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இப்படத்தில் ஏற்கனவே பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகிறார்கள். போதாத குறைக்கு தற்போது லியோ படத்தில் லோகேஷும் சில சீன்களில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய் கேட்டுக் கொண்டதால் லோகேஷ் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து நடித்திருப்பார்.

Also read: 2வது முறை மிஸ் பண்ணாமல் கரம் பிடித்த யூடியூப்பர் இர்ஃபான்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

அதேபோல் லியோ படத்திலும் நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று விஜய் கூறியிருக்கிறார். அத்துடன் மாஸ்டர் படம் எப்படி வெற்றி அடைந்ததோ அதேபோல் லியோ படத்திலும் நீங்கள் வந்து நடித்தால் பிளாக்பஸ்டர் ஆகும் என்று செண்டிமெண்டாக பேசி லோகேஷை லாக் செய்து விட்டார்.

அவரும் விஜய் கேட்டதுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இது பொதுவாக எல்லா படங்களிலும் இருப்பது தான். ஒரு படம் என்றால் அப்படத்தின் இயக்குனர், மியூசிக் டைரக்டர், டான்ஸ் மாஸ்டர் இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சில காட்சிகளில் திரையில் தோன்றுவது தற்போது வழக்கமாக இருக்கிறது.

Also read: 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்

அதே மாதிரி தான் லோகேஷ் மாஸ்டர் படத்தில் கிளைமாக்ஸ் இல் ஒரு டம்மி சீனில் வந்திருப்பார். ஆனால் லியோ படத்தில் அப்படி ஏதும் இல்லாமல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அப்படி என்றால் இவருக்கு எந்த மாதிரியான சீன் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் மாஸ்டர் படத்தை விட விக்ரம் படத்திற்கு பிறகு தான் லோகேஷின் புகழாரம் எல்லா பக்கமும் பரவியது. இவர் நடிகராக வராமலேயே ஒரு இயக்குனர் என்ற முறையில் அவ்வளவு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் என்றால் தற்போது திரைக்கு மட்டும் வந்தால் இவருடைய சீனில் அதிரிபுதிரியாக தான் ரசிகர்கள் தெறிக்க விடுவார்கள். அப்படி இருக்கையில் அதற்கு ஏற்ற மாதிரி தான் இவருடைய கதாபாத்திரத்தை அமைத்துக் கொள்வார். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: யானைக்கு நிகழ்ந்த அநியாயத்தின் கதை.. படம் மூலமாக மனிதருக்கு கொடுக்கும் சவுக்கடி

Trending News