ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 1, 2024

வெண்ணிலாவை விட நீ தான் பொக்கிஷம் என காதலை சொன்ன விஜய்.. ராகினி செய்த சதியால் அல்லல்படும் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா என்கிற ஒரு துருப்புச் சீட்டை வைத்து ராகினி, கொஞ்ச நாளாக காவிரியை பிளாக் மெயில் பண்ணி கஷ்டப்படுத்தினார். ஆனால் விஜயின் சந்தோசம் வெண்ணிலா காதல் மீது தான் இருக்கிறது என்று தவறாக புரிந்து கொண்ட காவேரி, விஜயின் பிறந்தநாள் பரிசாக ஆசிரமத்தில் இருந்த வெண்ணிலாவை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்.

வெண்ணிலாவை பார்த்த அதிர்ச்சியில் விஜய் உருகி உருகி அழுது கவலைப்பட ஆரம்பித்து விட்டார். ஆனால் அது எல்லாமே வெறும் அக்கறையும் கரிசனமும் தவிர காதல் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த வகையில் வெண்ணிலாவை சரிப்படுத்தி பழைய மாதிரி கொண்டு வர வேண்டும் என்று விஜய் ஆஸ்பத்திரியில் சேர்த்து ட்ரீட்மென்ட் எடுக்க உதவப் போகிறார்.

அத்துடன் தூங்கிக் கொண்டிருந்த காவிரியிடம் சொல்லும் விதமாக உன்னை விட எனக்கு வேறு எதுவுமே பெருசு இல்லை. நீ தான் எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம் என்று அவருடைய காதலை லெட்டர் மூலம் எழுதி வைத்துவிட்டு நீ நிம்மதியாக தூங்கி ரெஸ்ட் எடு. நான் வெண்ணிலாவை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வரேன் என்று கிளம்பி விட்டார்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ராகினி, விஜய் ரூம்குள் நுழைந்து விஜய் காவிரிக்காக எழுதி வைத்திருந்த காதல் கடிதத்தை கிழித்து போடுகிறார். பிறகு காவேரி எழுந்தபின் விஜய் பற்றி தவறாக சொல்லும் விதமாக உன்னை விட வெண்ணிலா தான் முக்கியம் என்று வெண்ணிலவுடன் விஜய் கிளம்பி போய்விட்டார். நீ இனி விஜய்க்கு இரண்டாவது பட்சம் தான் என்று தேவையில்லாத வார்த்தைகளை சொல்லி காவிரியை அல்லல் படுத்த நினைக்கிறார்.

ராகினி சொல்வது உண்மைதான் என்று நினைக்கும் காவிரியும் விஜய் நினைத்து வருத்தப்பட போகிறார். ஆனால் ராகினி என்ன சதி செய்தாலும் அது விஜய் மற்றும் காவிரியின் காதலுக்கு நல்லதாக தான் முடிகிறது. அந்த வகையில் ராகினி, விஜய் எழுதிய காதல் கடிதத்தை கிழித்துப் போட்டி இருந்தாலும் காவிரியிடம் நேரடியாக விஜய் அவருடைய காதலை சொல்லும் தருணத்திற்கு ராகினி உதவி பண்ணும் விதமாக சம்பவத்தை செய்திருக்கிறார்.

அந்த வகையில் இனி யார் நினைத்தாலும் காவேரி மற்றும் விஜய்யை பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்ப இவர்களுடைய காதல் வலுவாகி விட்டது. இனி தொடர்ந்து ராகினி ஏமாற்றம் தான் அடையப் போகிறார்.

- Advertisement -spot_img

Trending News