Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவை பார்த்ததும் சின்ன குழந்தை போல் விஜய் அழுது கொண்டே பேசுகிறார். உன்னால எப்படி என்னை மறக்க முடிந்தது என்று மனவேதனையுடன் கேட்கிறார். உடனே ராகினி அவர் உங்களை மறக்கவே இல்லை. சுயநினைவு இல்லாமல் ஆசிரமத்தில் இருக்கும் பொழுது கூட உங்கள் பெயரை சொல்லிக் கொண்டுதான் புலம்பி இருக்கிறார்.
அதாவது நீங்கள் அப்பளத்திற்கு மார்க்கெட்டிங் பண்ணுவதற்காக காவேரி எடுத்த புகைப்படம் பேப்பரில் வெளியானது. அந்த பேப்பரில் உங்க புகைப்படத்தை பார்த்து விஜய் விஜய் என்று உங்க பெயரை சொல்லிக் கொண்டே புலம்பி இருக்கிறார் என ராகினி, விஜய்யிடம் அந்த செய்தித்தாளை காட்டுகிறார். அதை பார்த்ததும் விஜய் ரொம்பவே பீல் பண்ண ஆரம்பித்து விட்டார்.
அத்துடன் அஜய், நாங்கள் ஆசிரமத்திற்கு போகும்பொழுது கூட இந்த செய்தித்தாளை கையில் வைத்துக் கொண்டுதான் வெண்ணிலா இருந்தார். நான் கூட உங்களுக்கு விஜய் ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டதற்கு உங்க பெயரை தான் சொன்னார் என்று அஜய் சொல்லுகிறார். உடனே விஜய், எல்லா விஷயத்தையும் நீ எப்படி தெரிந்து கொண்டாய். உனக்கு வெண்ணிலா ஆசிரமத்தில் தான் இருக்கிறார் என்று எப்படி தெரிந்தது.
யாருமே இல்லாமல் இருப்பவர்கள் தான் ஆசிரமத்தில் இருப்பார்கள், அப்படி இருக்கும் பொழுது உன்னால் மட்டும் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது. என்ன நடந்தது என்று மறைக்காமல் சொல்லு என அஜய்யை புரட்டி போடும் அளவிற்கு விஜய் கோபத்துடன் அஜய் சட்டையை பிடித்து கேள்வி கேட்கிறார். அப்பொழுது அஜய், எல்லாத்துக்கும் காரணம் என்னுடைய அப்பா தான்.
அவர்தான் வெண்ணிலாவின் குடும்பத்திடம் நீங்கள் விஜய்யை விட்டு கண்காணாத இடத்திற்கு போக வேண்டும் என்று சண்டை போட்டு வெளியே அனுப்பி வைத்தார். அப்பொழுது அவர்கள் போகும்பொழுது தான் கார் விபத்து ஆகிவிட்டது. இதைப்பற்றி அந்த டிரைவரிடம் கேட்ட பொழுதுதான் வெண்ணிலா ஆசிரமத்தில் இருந்தது எங்களுக்கு தெரிய வந்தது என எல்லா உண்மையும் அஜய் போட்டு உடைக்கிறார்.
அப்படி என்றால் தெரிந்ததும் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்ட பொழுது, ராகினி நாங்கள் காவிரியிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டோம். அவர்தான் உங்களிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறாள் என்று போட்டுக் கொடுக்கிறார். அதற்கு விஜய், அப்படி என்றால் காவிரியின் பிறந்தநாள் பரிசாக சொன்னது இதுதானா. இந்த விஷயத்தை வைத்து தான் காவிரியை டார்ச்சர் செய்திருக்கிறீர்களா?
அதனால் தான் காவேரி கொஞ்ச நாளா மனசு கஷ்டத்திலே இருந்திருக்கிறார். அதற்குக் காரணம் நீங்கள் இரண்டு பேர் தானா என்று அஜய் மற்றும் ராகினியை விஜய் கோபமாக திட்டிவிட்டார். பிறகு வெண்ணிலாவை பார்த்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கையைப் பிடித்துக் கொண்டு விஜய் கூட்டிட்டு போய்விடுகிறார். இதையெல்லாம் பார்த்து காவேரி எதுவும் பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுது நிலை குழைந்து போய் நிற்கிறார்.
மேலும் தாத்தா, கங்கா, பாட்டி அனைவரும் சேர்ந்து காவிரியை திட்டுகிறார்கள். எதற்கு வெண்ணிலாவை கூட்டிட்டு வந்தாய் என கேட்கிறார்கள். உனக்கு வெண்ணிலா பற்றி விஷயம் தெரிந்திருந்தால் உடனே என்னிடம் சொல்லி இருக்கலாம். நான் பார்த்திருப்பேன் என்று தாத்தாவும் திட்டுகிறார்.
ஆனால் எதற்கும் பதில் சொல்ல முடியாமல் காவிரி அழுது கொண்டே இருக்கிறார். ஆனால் என்ன நடந்தாலும் நீ தான் என்னுடைய பொக்கிஷம் என சொன்ன விஜய் மனதில் காவேரிக்கு தான் எப்பொழுதுமே இடம் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. ஆனாலும் வெண்ணிலாவின் நிலைமைக்கு நாமும் ஒரு காரணம் என்பதால் விஜய் கூடவே இருந்து ட்ரீட்மென்ட்க்கு உதவி செய்து வெண்ணிலாவை குணப்படுத்த போகிறார்.