புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மற்றொரு நடிகரின் படத்தை பார்க்க அலைந்து திரிந்த விஜய்.. இப்போ அவருக்கே சான்ஸ் கொடுக்கும் தளபதி

Vijay who wandered to watch another actor’s film: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் அப்பாவிற்கு இருக்கும் பேரும் புகழையும் வைத்து வாரிசு நடிகர்களாக நுழைந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி வந்தவர்கள் அனைவரும் ஜெய்த்தார்களா என்று கேட்டால் அதில் ஒரு கேள்விக்குறி தான். திறமை இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதற்கு உதாரணம் விஜய்.

தற்போது தளபதியாக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தாலும் ஆரம்பத்தில் வாய்ப்புக்காக போராடி இருக்கிறார். அந்த சமயத்தில் பல நடிகர்களுடன் போட்டி போட்டு மோதி இருக்கிறார். அப்படி இவர் சினிமாவிற்குள் நுழைந்த சமயத்தில் இன்னொரு ஹீரோ டாப் இடத்தில் முன்னணியில் இருந்திருக்கிறார்.

அதனால் அவருடைய படத்தை பார்ப்பதற்கு விஜய்க்கு ஆர்வம் அதிகம் உண்டு. அத்துடன் அவருடைய நடிப்பை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு படத்தையும் மிஸ் பண்ணவே மாட்டாராம். அப்படிப்பட்ட அந்த நடிகருக்கு தற்போது தளபதி சான்ஸ் கொடுக்கும் அளவிற்கு முன்னுக்கு வந்து விட்டார்.

Also read: விஜய்யை விடாமல் துரத்தி பிடித்த ரஜினி பட இயக்குனர்.. பல நூறு கோடி முதலீட்டிற்கு சன் பிக்சர்ஸ் உடன் போட்டி போடும் நிறுவனம்

அந்த நடிகர் வேறு யாருமில்லை டாப் ஸ்டார் பிரசாந்த் தான். இவருடைய நடிப்பில் வெளிவந்த திருடா திருடா படத்தை பார்ப்பதற்காக விஜய் தியேட்டர் தியேட்டராய் அலைந்து திரிந்து இருக்கிறார். முக்கியமாக இந்த படத்தை பார்ப்பதற்கு மூன்று நாட்களாகியும் தியேட்டர்களில் டிக்கெட் எதுவும் கிடைக்காமல் தவித்து இருக்கிறார்.

அந்த நேரத்தில் பிரசாந்த் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டு நண்பர்களிடம் சொல்லி ஃபீல் பண்ணி இருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட விஜய் தற்போது அனைவரும் உயர்ந்து பார்க்கும் தூரத்திற்கு வளர்ந்து விட்டார். அத்துடன் பிரசாந்துக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆக தளபதி 68 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தையும் கொடுத்து இருக்கிறார்.

Also read: விஜய் ரஜினிக்கு மட்டும் அள்ளிக் கொடுப்பீங்க.. இந்த விஷயத்தில் பொறாமையில் வரிஞ்சு கட்டி வரும் அஜித்

Trending News