வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கிடைக்கிற கேப்பில் ஆட்டைய போட நினைக்கும் விஜயா.. முத்துவிடம் வசமாக சிக்க போகும் ரோகிணி

Sirakadikka Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி சொன்ன பொய்யால் ஒவ்வொரு நாளும் நெருப்பு மேல் நடப்பது போல் பயத்துடனே வாழ்ந்து வருகிறார். அதுவும் ஒண்ணா இரண்டு அடுக்கடுக்காக பல பொய்களை மறைத்து மனோஜை திருமணம் செய்து விஜயாவை ஆட்டி படைக்கிறார். விஜயாவும் தன் மருமகள் பணக்கார வீட்டுப் பெண் என்பதற்காக கூடு கும்பிடு போட்டு அடிமையாக இருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்த முத்துவிற்கு மட்டும் ரோகினி மீது மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதை கண்டுபிடிக்கும் விதமாக ஒவ்வொரு முயற்சியும் எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்திருக்கும் பிரவுன் மணியை வைத்து எப்படியாவது எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முத்து நினைக்கிறார்.

அதற்காக அவரை குடிக்க வைத்து அவர் மூலமாக எல்லாம் உண்மையும் வாங்கிவிடலாம் என்று நினைத்தார். ஆனால் பிரவுன் மணி ரோகினியின் கணவர் மனோஜை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து சுயநினைவை மறக்கடிக்க வைத்து விட்டார். இதை தெரிந்த ரோகிணி வீட்டில் பெரிய ரணகளத்தை உண்டாக்கிட்டார். அத்துடன் எல்லாத்துக்கும் காரணம் முத்து தான் என்று வீட்டில் இருப்பவர்கள் அவரை திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

Also read: ஜனனி ஈஸ்வரியை டைவர்ட் பண்ண சக்திக்கு கொடுத்த டார்ச்சர்.. மறைமுகமாக இருந்து ஆடு புலி ஆட்டத்தை ஆடும் கருப்பு ஆடு

இதனைத் தொடர்ந்து ரோகிணி, மனோஜ் ஏன் குடித்தீர்கள் என்று அடித்து திட்டுகிறார். இதை பார்த்த விஜயா கிடைக்கிற கேப்பில் ஆட்டைய போட வேண்டும் என்ற நோக்கத்தில் அவனுக்கு இப்பொழுது வேலை எதுவும் இல்லாததால் கவலையில் இருக்கிறான். அதனால் கூடிய விரைவில் உங்க அப்பாவிடம் இருந்து அவனுக்கு பிசினஸுக்கு பணத்தை வாங்கி கொடு என்று ரோகினி மீது மொத்த பாரத்தையும் இறக்கி விடுகிறார்.

பிறகு ரோகிணி, இனிமேலும் பிரவுன் மணி இங்கே இருந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் தான் வரும் என்று அவரை ஊருக்கு அனுப்ப பிளான் பண்ணி விட்டார். அதற்காக பிரவுன் மணியின் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்ற மாதிரி ஒரு போன் வரவைத்து அதன் பின் வீட்டை விட்டு கிளம்ப சொல்கிறார் ரோகினி. இந்த பிளான் படி பிரவுன் மணியும் வீட்டை விட்டு போய்விடுவார்.

பிறகு இவர்கள் அனைவரும் சென்னைக்கு வந்த பிறகுதான், முத்து கால் டாக்ஸி ஓட்டும்போது எதர்ச்சியாக அவருடைய கண்ணுக்கு பிரௌன் மணி தென்படுவார். அதன் மூலம் கூடிய விரைவில் ரோகிணி பற்றிய எல்லா உண்மையும் முத்துவுக்கு தெரியவரும். அப்பொழுது குடும்பத்தின் முன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார் ரோகிணி.

Also read: டாம் அண்ட் ஜெரியாக இருந்த ராஜிவை திருமணம் செய்த கதிர்.. பாக்யா தலைமை நடந்த ரகசிய கல்யாணம்

Trending News