புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரோகினி மேல் சந்தேகப்பட்டு மனோஜை குழப்பிய விஜயா.. ரூம் கட்டுவதற்கு கிடைத்த பணம், சந்தோஷத்தில் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீனாவிடம் படிப்பு பணம் இல்லை என்பதால் விஜயா மனோஜ் மற்றும் ரோகினி மட்டம் தட்டி ஏளனமாக பார்த்து பேசுகிறார்கள். அந்த வகையில் இவர்களை விட ஒரு படி முன்னேற வேண்டும் என்று மீனா ஒவ்வொரு முறையும் சபதம் போட்டு வருகிறார். அதில் முதலாவதாக மாடியில் ரூம் கட்டி தனக்கு என்று ஒரு தனி ரூம் வேண்டும் என்று முத்து மீனா முடிவெடுத்து இருக்கிறார்கள்.

அதற்காக முத்து ஒவ்வொரு வேலையிலும் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்கிறார். இந்த நிலையில் தற்போது புதிதாக வாங்கிட்டு வந்த கட்டிலை வீட்டு ஹாலில் போட்டு விட்டார். இதையும் நக்கல் அடிக்கும் விதமாக மனோஜ் மற்றும் விஜயா கிண்டல் அடித்து பேசினார்கள். ஆனால் இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முத்து மீனாவிற்கு ஸ்ருதி சப்போட்டா பேசி ஆதரவு கொடுத்து வருகிறார்.

மீனா போட்ட சவாலுக்கு உதவி பண்ணிய ரவி

இந்த நிலையில் ரவி வேலை பார்க்கும் ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஜோடியாக கலந்து கொண்டு வின் பண்ணுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுப்பதாக இருக்கிறது. இதை கேள்விப்பட்டதும் மனோஜ் ரோகினி இதில் கலந்து கொள்ள முடிவு பண்ணுகிறார்கள். அந்த வகையில் நாம் தான் ஜெயிக்க வேண்டும் என்று ஓவர் நம்பிக்கையில் பேசுகிறார்கள்.

உடனே இவர்களுக்கு சவால் விடும் விதமாக முத்து மற்றும் மீனா இந்த போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துக் காட்டுகிறோம் என்று இறங்கி விட்டார்கள். இவர்களை தொடர்ந்து ரவி மற்றும் சுருதியும் நடைபெற போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இப்படி நடக்க இருக்கும் போட்டியில் ஒவ்வொரு ரவுண்டிலும் ரோகிணி ஏதாவது ஒரு விஷயத்தில் தோற்றுப் போய் விடுகிறார்.

கடைசியில் மனோஜ் அனைவரது முன்னிலையிலும் ரோகிணி கையை பிடித்துக் கொண்டு என் மனைவி இதுவரை என்னிடம் எந்த ஒரு விஷயத்தையும் மறைத்து பொய் சொல்லவில்லை என்று சொல்கிறார். இதை கேட்டதும் குற்றமுள்ள மனசு குறுகுறுக்கும் என்பது போல் ரோகிணி தடுமாறி மனோஜ் கையை தட்டி விடுகிறார். அதனால் இந்த நிகழ்ச்சியில் ரோகினி மனோஜ் ஜெயிக்க முடியாமல் போகிறது.

இதை மனதில் வைத்து யோசித்துப் பார்த்து மனோஜ்க்கு ரோகிணி மீது சின்னதாக சந்தேகம் வரப்போகிறது. ஏற்கனவே விஜயா, மனோஜை குழப்பும் விதமாக ரோகிணி கல்யாணத்துக்கு முன்னாடி எப்படிப்பட்டவள் என்ற ஒரு விஷயமும் தெரியாது. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பத்து நாள் முன்னாடி தான் அவளைப் பற்றி எனக்கு தெரியும். அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள் என்று மனோஜ் மனதை விஜயா குழப்பிவிட்டு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டார்.

இதனால் ரோகிணி கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியை இழந்து தவிக்கப் போகிறார். இதற்கு இடையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி மற்றும் சுருதி குழந்தை விஷயத்தில் தோற்றுப் போய் விடுகிறார்கள். அடுத்ததாக முத்து மற்றும் மீனா உணர்ச்சிபூர்வமாக பேசி இந்த நிகழ்ச்சிகள் ஜெயித்து காட்டுகிறார்கள். அதன்படி பரிசுத்தொகையாக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

இதை பார்த்து வயிற்று எரிச்சலில் ரோகினி, மனோஜ் மற்றும் விஜயா புலம்ப போகிறார்கள். அடுத்ததாக முத்து சொன்னபடி கிடைத்த பணத்தை வைத்து மாடியில் ரூம் கட்டுவதற்கு அஸ்திவாரத்தை போடப் போகிறார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மீனா வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படப்போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News