புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மீனாவை கொத்தடிமையாக வேலை வாங்கும் விஜயா.. மாமியாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்ட போகும் ஸ்ருதி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலிலே ஓரளவுக்கு தற்போது மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பது ஒரு சில நாடகங்கள் மட்டுமே. அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது சிறகடிக்கும் ஆசை. இந்த நாடகத்தின் கதை சாதாரண நடுத்தர குடும்பத்தில் நடக்கும் விஷயத்தை புட்டு புட்டு வைக்கும் விதமாக இருக்கிறது. அதாவது பணக்கார மருமகளை கொண்டாடுவது, ஏழை குடும்பத்தில் வந்த மருமகளை கொத்தடிமையாக நடத்தும் மாமியார்.

வேண்டாத மருமகள் கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்று சொல்வார்கள். அது போல தான் மீனாவின் நிலைமை இருக்கிறது. என்னதான் மீனா, புகுந்த வீடு தன்னுடைய குடும்பம் என்று ஒவ்வொன்றையும் செய்து வந்தாலும் கடைசியில் இவருக்கு மிஞ்சுவது அவமானம் தான். அதுவும் இவருடைய மாமியார் விஜயாவிற்கு மீனாவை கண்டாலே ஆக மாட்டேங்குது.

போதாக்குறைக்கு ரோகினிக்கு அடுத்து தற்போது பணக்கார மருமகளான ஸ்ருதியை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார். ஸ்ருதிக்கு ஒரு அடிமையாக தான் விஜயா ஒவ்வொரு வேலையும் பார்த்து பார்த்து பண்ணுகிறார். ஆனால் ஸ்ருதியை பொருத்தவரை எல்லாமே டேக் இட் ஈஸி. சுதந்திரம், ஜாலி என்பதற்கு ஏற்ப மாடனாக வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

Also read: கதிருக்கு தர்ம அடி கொடுத்த ஜனனியின் தம்பி.. குணசேகரனின் தம்பியால் ஏற்பட போகும் ட்விஸ்ட்

அந்த வகையில் இவருக்கு எந்த விதத்திலும் மாமியாருடன் ஒத்துப்போக வாய்ப்பே இல்லை. இவருக்கு அடுத்து ரோகிணி எல்லா தில்லாலங்கடி வேலையும் பார்த்து வருகிறார். இவரைப் பற்றி உண்மையான விஷயம் தெரிந்து கொண்டால் விஜயாவின் ஆட்டமே க்ளோஸ் என்கிற அளவிற்கு தான் ரோகிணி தில்லு முல்லு செய்து வருகிறார். கடைசியாக உருப்படியாய் இருப்பது மீனா மட்டும்தான்.

அப்படிப்பட்ட மீனாவியை வேலைக்காரி மாதிரி நடத்தி மட்டம் தட்டி வருகிறார் மாமியார் விஜயா. ஆனால் இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் இனி ஸ்ருதி ஆட்டம் ஆட போகிறார். அந்த வகையில் மாமியாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு ஒவ்வொன்றையும் தரமாக செய்யப் போகிறார். ஸ்ருதியை பொருத்தவரை மாமியாருக்கு மரியாதை கொடுக்க வேண்டும், அவர்கள் சொல்வது தான் கேட்க வேண்டும் என்ற வழக்கமே கிடையாது.

அப்படி இருக்கும் பட்சத்தில் விஜயாவின் கொட்டத்தை அடக்கும் விதமாக ஸ்ருதியின் நடவடிக்கை இருக்கப்போகிறது. இதற்கிடையில் பாவம் முத்து கோபத்தால் எல்லாரிடமும் சிக்கி தவித்து வருகிறார். இவருடைய உண்மையான மனசை பற்றி தெரிந்து கொள்ளாத ஸ்ருதி, ரோகிணியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எப்படியாவது முத்துவிடமிருந்து மீனாவை பிரித்து விட வேண்டும் என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் மூன்று மருமகள்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கப் போவது மாமியார் தான்.

Also read: கொழுந்தனை பார்த்து மன்னிப்பு கேட்கும் மீனா.. கதிரை கடையிலிருந்து துரத்தி அடித்த பாண்டியன்

Trending News