திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முத்துவிடம் சத்யாவை வைத்து டீல் பேசப்போகும் விஜயா.. மீனா எடுத்த முடிவால் ரோகினிக்கு கிடைத்த சந்தோசம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீனாவின் வீட்டிற்கு போனதும் மீனா, தம்பி செய்த காரியத்துக்கு மன்னிப்பு கேட்டு முத்துவின் காலில் விழுகிறார். அத்துடன் மீனாவின் குடும்பமும் முத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். அப்பொழுது முத்து, மீனா மற்றும் மாமியாரை சமாதானப்படுத்தி பேசுகிறார். அந்த நேரத்தில் வீடியோவை பார்த்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சத்யாவை தேடி போலீஸ் வந்து விசாரிக்கிறார்கள்.

அப்பொழுது முத்து, சத்யாவை நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்கே போனான் என்று தெரியவில்லை என்று கூறிய நிலையில் போலீஸ், சத்யா திருடுன விஷயம் அப்பட்டமாக வீடியோ மூலம் எல்லோருக்கும் தெரிந்ததால் கண்டிப்பா அவனுக்கு தண்டனை உண்டு என்று சொல்லுகிறார்கள். உடனே முத்து அவன் ஏதோ புத்தி கெட்டுப் போய் தெரியாமல் பண்ணிட்டான். சத்தியா தற்போது முழுமையாக மாறி விட்டான் என்று சொல்கிறார்.

இதை கேட்ட போலீஸ், அப்படி என்றால் அவன் யாரிடம் பணத்தை திருடினானோ அவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் வந்து கேஸ் கொடுக்காமல் இருந்தால் சத்யா தப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதன்படி முத்துவும் நாங்கள் அவர்களிடம் பேசி கேசை கொடுக்காதபடி பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி போலீசை அனுப்பி வைத்து விடுகிறார்.

பிறகு வீட்டில் இருப்பவர்கள் சத்யாவை தேடும் நிலையில் முத்து, மொட்டை மாடிக்கு போகிறார். அங்கே இவர்களை பார்த்ததும் சத்யா தற்கொலை பண்ண முயற்சி எடுக்கிறார். ஆனால் எப்படியோ முத்து, சத்யாவை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக முத்துவின் நண்பர் செல்வம் வீட்டிற்கு கூட்டிட்டு போய் தங்க வைக்கிறார்.

அடுத்ததாக முத்து மற்றும் மீனா இருவரும் சேர்ந்து விஜயா வீட்டிற்கு போகிறார்கள். போகும்பொழுதே மீனா புதுசாக வாங்கிய போனை முத்துவிடம் கொடுக்கிறார். அந்த நேரத்தில் முத்து, என் போன் காணாமல் போன நேரத்தில் எப்படி சத்யா வீடியோ மட்டும் வெளியே வந்தது. இது யாரோ நமக்கு பிரச்சனை கொடுக்க வேண்டும் என்பதற்காக செய்த சதி போல் தெரிகிறது. அதை கண்டுபிடிக்கணும் என்று சொல்கிறார்.

ஆனால் அதற்கு முன் வீட்டிற்கு போய் அம்மா, சத்யா மீது கேஸ் கொடுக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முத்து சொல்லி மீனாவை வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அங்கே போனதும் மனோஜ் மற்றும் விஜயா ருத்ரம் தாண்டவம் ஆடி மீனாவை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து பேசுகிறார்கள். ஆனாலும் முத்து, மனோஜை பார்த்து நீயும் தான் பணத்தை திருடிட்டு போனாய் என்று சொல்லி மடக்க பார்க்கிறார்.

ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத விஜயா, இந்த வீட்டில் மீனா இருந்தால் நான் வீட்டை விட்டு போயிருவேன் என்று ஒரு செக் வைக்கிறார். அத்துடன் நான் சத்யா மீது கேஸ் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்ற டீல் பேச போகிறார். இதைக் கேட்ட முத்து மீனாவுக்கும் வேற வழி இல்லாததால் விஜயா சொன்னபடி தனி குடித்தனம் போவதற்கு சம்மதித்து விடுவார்கள்.

இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்பதற்கு ஏற்ப தற்போது ரோகிணி உச்சகட்ட சந்தோஷத்தை அடையப் போகிறார். ஆனால் மீனா மற்றும் முத்து அந்த வீட்டில் இல்லை என்றால் விஜயாவின் கதி மற்றும் அந்த குடும்பத்தின் கதி என்னவாக இருக்கப்போகிறது என்பது இனிமேல் தான் தெரிய வரப்போகிறது. ஒருவேளை இதுவும் நல்லதுக்கு தான் என்பதற்கு ஏற்ப இனியாவது மீனா மற்றும் முத்து சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் எப்படி வீடியோ வெளியே போனது என்று முத்து கண்டுபிடித்து ரோகிணியின் முகத்திரையை கிழிக்க போகிறார்.

Trending News