புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மதுக்கு அடிமையாகிய முத்துவை பார்த்து சந்தோஷப்படும் விஜயா.. விரக்தியில் மீனா எடுக்க போகும் முடிவு

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து என்னை மதிக்காத உன் தம்பி பிறந்தநாளுக்கு போகக்கூடாது என்று மீனாவிடம் சொல்லிவிட்டார். இதனால் மீனா என்ன பண்ணுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் பொழுது சுருதி, நீங்கள் உங்கள் தம்பிக்காக போய்ட்டு தான் வர வேண்டும். அதனால் முத்து சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதீங்க என்று சொல்லுகிறார்.

அடுத்ததாக கோவிலில் மீனாவுக்காக காத்துக் கொண்டிருக்கும் அம்மா மற்றும் தம்பி சத்யா, மீனாவிற்கு போன் பண்ணி கூப்பிடுகிறார்கள். அப்பொழுது வேறு வழி இல்லாமல் மீனாவும் கோவிலுக்கு கிளம்பி பூஜை அனைத்தையும் முடித்துவிட்டு சத்யாவுடன் சேர்ந்து கூல் ஊற்ற ஆரம்பித்து விடுகிறார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த விஜயா, முத்து வந்ததும் கரெக்டாக போட்டு கொடுத்து விட்டார்.

முத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் சந்தோஷப்படும் விஜயா

வழக்கம்போல் முத்து வீட்டுக்குள் வரும்பொழுது மீனா என்று கூப்பிட்டு வருகிறார். ஆனால் மீனா எங்கேயும் இல்லாததால் போன் பண்ணி பார்க்கிறார். மீனா போன் எடுக்காமல் இருக்கும் பொழுது முத்துவிடம் விஜயா, உன் பொண்டாட்டி இங்கே இல்லை. நீ போகக்கூடாது என்று சொல்லியும் தம்பி பாசம் தான் முக்கியம் என்று கோவிலுக்கு கூல் ஊத்த போய்விட்டாள் என்று போட்டுக் கொடுக்கிறார்.

இதை கேட்டதும் முத்து, என் பொண்டாட்டி அப்படியெல்லாம் பண்றவ கிடையாது. நான் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு எனக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க தெரியும் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு ஒரு சந்தேகத்தின்படி கோவிலுக்கு போகிறார். அங்கே கோவிலில் மீனா கூழ் ஊற்றுவதை பார்த்துவிட்டு கோபப்பட்டு என்ன விட உன் தம்பி தான் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்து விட்டாய் என சொல்லி கிளம்புகிறார்.

இதனால் முத்துவை சமாதானப்படுத்துவதற்கு மீனா கோவிலில் இருந்து கிளம்புகிறார். அப்பொழுது கோவிலில் இருந்து கொண்டு வந்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும் அண்ணாமலைக்கு கொடுக்கிறார். உடனே அண்ணாமலை, முத்து கோவிலுக்கு வந்தாரா என்று கேட்டார். அதற்கு மீனா ஆம் வந்தார் என்று சொல்லிய நிலையில், விஜயா எல்லாம் நோட் பண்ணி மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டு கொள்கிறார்.

இதனை அடுத்து மீனா, முத்து வருகைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் நேரமாகியும் முத்து வராததால் கொஞ்சம் டென்ஷனில் காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு அனைவரும் தூங்கி நிலையில் முத்து லேட் ஆக தான் வீட்டுக்கு வருகிறார். ஆனால் வரும்பொழுது நல்ல குடித்துவிட்டு மீனா மீது கோபப்பட்டு வருகிறார். அந்த வகையில் மீனாவிடம் சண்டை போட்டு தனியாக முத்து தூங்கி விடுகிறார்.

இதையெல்லாம் பார்த்த விஜயா, மீனாவிடம் வந்து இப்பொழுது தான் எனக்கு திருப்தியாக சந்தோஷமாக இருக்கிறது. இதை பார்க்கும் பொழுது எனக்கு அப்படியே அல்வா சாப்பிடும் அளவிற்கு சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லி மீனாவை சீண்டுகிறார். இதனால் மீனா, உங்க பிள்ளை இப்படி குடிக்கிறாரே என்று கொஞ்சம் கூட கவலை இல்லையா? என்று கேட்கிறார்.

அதற்கு விஜயா என்னால ஒன்னும் அவன் குடிக்கவில்லை, நீ பண்ணின காரியத்துக்கு தான் அவன் மனசு கஷ்டத்தில் குடித்து வந்திருக்கிறான். நீ எப்பொழுதுமே இந்த வீட்டிற்கு தேவையில்லாத மருமகள், புருஷன் பேச்சைக் கேட்காத பொண்டாட்டியாகவும் தான் இருக்கிறாய். அது இப்பொழுதுதான் முத்துவுக்கு புரிந்து இருக்கிறது. அதனால் வேதனை தாங்காமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறான் என்று சொல்லி விஜயா, மீனாவை நோகடித்துவிட்டு போய்விடுகிறார்.

இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முத்து நிலமை பார்த்து மீனா விரக்தி ஆகிறார். இதனைத் தொடர்ந்து இனி எந்த காரணத்துக்காகவும் முத்து குடிக்க கூடாது. நம் மீது கோபமும் படக்கூடாது என்பதற்காக மீனா யோசித்து ஒரு முடிவு எடுக்கப் போகிறார். அந்த வகையில் முத்துவை காலையில் சமாதானப்படுத்திவிட்டு முத்துவிடம் இருந்து இனி நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News