ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

முத்து மீது மொத்த வெறுப்பையும் கக்கும் விஜயா மனோஜ்.. மீனா போட்ட சவாலை கெடுக்க போகும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சுருதி ஏதோ ஒரு வீடியோவை பார்த்து அதே போல் பண்ண வேண்டும் என்று ரவியை வற்புறுத்தினார். அதன்படி ரவி, சுருதியை தூக்கிக்கொண்டு மூன்று முறை வீட்டிற்குள் சுற்றி வருகிறார். இதை பார்த்த முத்து என்னாச்சு பல குரல் பேசுற மேடத்துக்கு ஏதாவது அடியா என்று கேட்கிறார்.

அதற்கு ரவி, அதெல்லாம் ஒன்னும் இல்லை ஏதோ ஒரு வீடியோவை பார்த்து இதே மாதிரி தூக்கு என்று ஆசைப்பட்டால் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். உடனே முத்து, மீனாவையும் தூக்கிக்கிட்டு சுற்றினால் என்னுடைய அன்பை புரிந்து கொள்வாள் என்று தூக்கி சுத்துகிறார். அப்பொழுது உள்ளே நுழைந்த ரோகிணி மற்றும் மனோஜ் நாங்களும் பண்ணுகிறோம் என்று இவர்களும் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி மூன்று பேரும் வீட்டிற்குள் சுற்றி வரும் பொழுது அங்கே அண்ணாமலை மற்றும் விஜயா வந்து விடுகிறார்கள். இதை பார்த்ததும் விஜயா கடுப்பாகி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார். உங்க பொண்டாட்டிகளை இப்படி சுத்தி அழகு பார்க்க வேண்டும் என்றால் ரூம்குள்ள வச்சு பண்ண வேண்டியதுதானே என்று சொல்கிறார். அதற்கு முத்து இரண்டு ரூமுதானே இருக்கு அதுல மூன்று பேர் எப்படி சுத்த முடியும் என்று சொல்கிறார்.

மீனா போட்ட சவாலில் கதி கலங்கி நிற்கும் முத்து

இதை கேட்ட அண்ணாமலை இதற்கு இப்பொழுதே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவருடைய நண்பருக்கு போன் பண்ணி இன்ஜினியரை வரவேற்கிறார். இன்ஜினியர் வந்ததும் அண்ணாமலை மாடிக்கு கூட்டிட்டு போய் இதில் ஒரு ரூம் கட்டுவதற்கு அளந்து எவ்வளவு ஆகும் என்று கேட்கிறார். உடனே அளந்து பார்த்த இன்ஜினியர் கிட்டத்தட்ட அஞ்சு லட்ச ரூபாய் வரை ஆகும் என்று சொல்லி முடிக்கிறார்.

உடனே விஜயா, இப்பொழுது அவ்வளவு பணம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு அண்ணாமலை வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கலாம் என்று சொல்கிறார். ஆனால் விஜயா எங்க அப்பா வீட்டு பத்திரத்தை நான் யாருக்காகவும் வைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி முத்து மீது வெறுப்பை கொட்டுகிறார். அதாவது முத்துக்கு ஒரு தனி ரூம் வேண்டுமென்றால் ஏதாவது ஒரு கூரை வீட்டை கட்டிட்டு அதில் போய் தங்க சொல்லுங்கள் என்று திமிராக சொல்கிறார்.

அடுத்து அண்ணாமலை அப்படி என்றால் நீங்க மூணு பேரும் வீட்டுக்கு பணம் கொடுங்கள் அதை வைத்து கட்டலாம் என்று மகன்களிடம் கேட்கிறார். அப்பொழுது மீனா என்னுடைய பங்குக்கும் நான் பணம் தருகிறேன் என்று சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் அதிக பணத்தை தருகிறேன் என்று சொல்லும் பொழுது மனோஜ் மட்டும் என்னிடம் அந்த அளவுக்கு பணம் கிடையாது தர முடியாது என்று கரராக சொல்லி விடுகிறார்.

இதனை தொடர்ந்து முத்து மீது வெறுப்பை கொட்டும் அளவிற்கு அவரை அசிங்கப்படுத்தி வெட்டியாக இருக்கிற உனக்கு எதுக்கு ரூம் என்கிற மாதிரி மனோஜ் வன்மத்தை கொட்டுகிறார். பிறகு இவர்கள் இவருடைய சண்டை கைகலப்பாக முடிந்து விடுகிறது. அந்த நேரத்தில் ரவி உள்ளே புகுந்து தடுத்து விடுகிறார். இதையெல்லாம் கேட்ட அண்ணாமலை மனம் நொந்து போய் இருக்கும் தருணத்தில் மீனா யாரும் எங்களுக்காக ரூம் கட்டித் தர வேண்டாம் என்று சொல்கிறார்.

அப்பொழுது மீனாவை கோர்த்து விடும் விதமாக ரோகிணி, இதை வச்சு மறுபடியும் சபதம் எல்லாம் போட்டுறாதீங்க என்று நக்கல் அடிக்கிறார். உடனே மீனா நீங்க சொன்னபடி நான் சபதம் போடுகிறேன் என் வீட்டுக்காரர் சம்பாதித்து மாடியில் எனக்கு ஒரு ரூம் கட்டி தருவார் என்று முத்துவிடம் கேட்காமல் மறுபடியும் ஒரு சபதத்தை போடுகிறார்.

அந்த வகையில் முத்து, மீனா ஆசைப்பட்ட மாதிரி கூடிய சீக்கிரத்தில் மாடியில் ஒரு ரூமை கட்டி கொடுத்து விடுவார். ஆனால் இதை தடுக்கும் விதமாக ரோகிணி மற்றும் விஜயா பல தில்லாலங்கடி வேலைகளை பண்ணப் போகிறார்கள். ஏனென்றால் அப்படி இருவரும் சேர்ந்து ரூம் கட்டி விட்டால் முத்து மீனா வெளியே போகாமல் இங்கே இருந்து விடுவார்கள் என்ற பயத்தினால் தடுப்பதற்கு பல வேலைகளை பார்க்கப் போகிறார்கள்.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Trending News