திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மீனா நகையை திருடிய விஜயா மனோஜ், சுட்டிக்காட்டப் போகும் அண்ணாமலை.. ஆரம்பமாகும் முத்துவின் ஆட்டம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் போனை திருடிய ரோகிணி அதில் இருக்கும் ஆதாரத்தை சிட்டிக்கு அனுப்பி வைத்து விடுகிறார். சிட்டியும் இதுதான் சான்ஸ் என்று முத்து மற்றும் மீனா வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக சத்யா திருடின விஷயத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுகிறார்.

இதை பார்த்த ரோகினி அந்த வீடியோவை எடுத்துக்கொண்டு விஜயாவிடம் காட்டுகிறார். உடனே மொத்த கோபத்துடன் விஜயா, மீனா வீட்டிற்கு போகிறார். அங்கே எப்பொழுதும் சத்யாவை பார்த்ததும் ராஜசி மாதரி நடந்து கொள்ளும் அளவிற்கு சத்யாவை அடிக்கிறார். ஏன் எதற்காக மாமியார் அடிக்கிறார் என்று புரியாத மீனா, விஜயாவிடம் கேட்கிறார்.

ஆனாலும் எதுவும் சொல்லாத விஜயா மறுபடியும் சத்யாவை அடிப்பதற்கு கையை ஓங்குகிறார். இதை பார்த்த மீனா மாமியாரின் கையைப் பிடித்து என் கண்ணு முன்னாடியே என் தம்பியை இப்படி அடிக்கிறீங்க. எதற்காக அடிக்கிறீங்க அவன் என்ன தப்பு பண்ணினான் என்று கேட்கிறார். அதற்கு விஜயா, ரோகினிடம் அந்த வீடியோவை காட்டு என்று சொல்லி திருடின வீடியோவை ரோகிணி, மீனாவிடம் காட்டுகிறார்.

அந்த வீடியோவை பார்த்த மீனா எதுவும் சொல்ல முடியாமல் அவமானப்பட்டு தலை குனிந்து நிற்கிறார். அத்துடன் விஜயா, இனி என் வீட்டு பக்கம் வந்து விடாதே என்று கோபமாக சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். கடைசியில் சத்யா செஞ்ச தவறுக்கு மீனாவுக்கு கிடைத்த தண்டனை என்பதற்கேற்ப மொத்த குடும்பமும் அவமானப்பட்டு நிற்கிறது.

இந்த விஷயம் எதுவும் தெரியாத முத்து சவாரியில் இருந்து திரும்பும் பொழுது தான் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள போகிறார். அப்பொழுது மீனாவை வீட்டுக்குள் விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் விஜயாவிடம் மல்லுக்கட்டும் விதமாக அண்ணாமலை, நீயும் தான் மீனாவின் நகையை திருடி உன் பையனுக்கு கொடுத்தாய்.

உன் பையனும் அதை எடுத்துக்கொண்டு விற்றான் அதெல்லாம் உனக்கு ஞாபகம் இல்லையா என்று விஜயா மற்றும் மனோஜ் செய்த தவறை சுட்டிக்காட்டப் போகிறார். அத்துடன் முத்துவும், மீனா மற்றும் சத்யாவுக்கு சப்போர்ட்டாக பேசி மீனாவை ஒரு வழியாக வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுவார். ஆனால் இந்த வீடியோ எப்படி வெளிவந்தது யார் மூலமாக வந்தது என்று முத்து ஒவ்வொரு விஷயங்களையும் கண்டறிய போகிறார்.

அப்பொழுதுதான் இந்த ரோகிணி பற்றிய ஒவ்வொரு விஷயங்களும் வெளியே வரப் போகிறது. தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொண்டு போட்டது போல் ரோகிணி இனி ஒவ்வொரு சிக்கலிலும் மாட்டிக் கொண்டு அல்லல்படப் போகும் நேரம் வந்துவிட்டது. இனி ரோகிணியை வச்சு செய்யும் அளவிற்கு முத்துவின் ஆட்டம் அதிர போகிறது.

Trending News