புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மீனா சொன்னது விஜயா மண்டைக்கு இப்பதான் ஏறி இருக்கு.. மனோஜை சந்திக்க போகும் தினேஷ், பயத்தில் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா வீட்டில் கொலு வைப்பதற்காக தேவையான பொருள்களை வாங்கிட்டு வந்து ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கிறார். அப்பொழுது முத்துவும் அவருக்கு தெரிந்த கடையில் பொருட்களை வாங்கிட்டு வந்திருக்கிறார். அதில் ஒரு பொருளை பார்த்த உடன் மீனா, இந்த மாதிரி தான் அத்தை சொல்லிக் கொடுக்கும் நடனப்பள்ளியில் இரண்டு மாணவர்கள் இருந்தார்கள் என்று முத்துவிடம் சொல்கிறார்.

இதை கேட்ட விஜயா, உனக்கு பரதநாட்டியம் பற்றி என்ன தெரியும். அவர்கள் பரதத்தில் இருக்கும் ஒரு கலையே தான் பயிற்சி எடுத்தார்கள் என்று சொல்கிறார். அதற்கு முத்து அந்த போட்டோவை காண்பித்து இப்படி இருவரும் நெருக்கமாக இருந்ததை நீ பார்த்தியா? இதை அம்மாவிடம் சொன்னியா என்று கேட்கிறார். அதற்கு மீனா, நான் சொல்வதற்குள் உங்க அம்மா என்னை பேசவே விடாமல் திட்டி அனுப்பி விட்டார்கள் என்று சொல்கிறார்.

பிரச்சனைகள் சிக்க போகும் விஜயா

உடனே வழக்கம் போல் அங்கு இருந்த மனோஜ் மற்றும் ரோகினி விஜயாவுக்கு சப்போட்டா பேசி மீனாவை மட்டம் தட்டி விட்டார்கள். ஆனாலும் விஜயா அந்த மாணவர்களை விட்டுக் கொடுக்காமல் இது பரதத்தில் இருக்கும் ஒரு கலை தான் என்று அனைவருக்கும் நடனத்தின் மூலம் செய்து காண்பிக்கிறார். இதை பார்த்த மீனா அவர்கள் இப்படி பண்ணவே இல்லை எனக்கு நன்றாக தெரியும்.

அவர்களிடம் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. ஆனால் அதை சொன்னால் அத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று முத்துவிடம் புலம்புகிறார். உடனே முத்து, விடு நம்ம என்ன சொன்னாலும் அம்மா நம்ப மாட்டாங்க. சில பேருக்கு பட்டாதான் புத்தி தெரியும் என்று சொல்லிவிடுகிறார். இதனை தொடர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் ஷோரூம் இல் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது மனோஜ் வியாபாரம் கொஞ்சம் டல் அடிக்கிறது. வித்யா வேற 75 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிட்டு ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார் என்று ரோகினி இடம் புலம்புகிறார். உடனே ரோகினி இது என்ன அதுக்குள்ளயும் பணத்தை கேட்க ஆரம்பித்துவிட்டான் என்று யோசிக்க ஆரம்பிக்கிறார். அந்த நேரத்தில் ஷோரூமுக்கு பொருள்களை வாங்குவதற்கு ஒருத்தர் வருகிறார்.

அவரை நம்பி மனோஜ் எல்லா பொருட்களையும் பற்றி சொல்லி 10 லட்ச ரூபாய்க்கு மேல லிஸ்ட் போடுகிறார். ஆனால் அவர் இப்ப வாங்கவில்லை. ஒரு லாட்டரி சீட்டு வாங்கி வைத்திருக்கிறேன். அதில் எனக்கு 25 லட்ச ரூபாய் பணம் கிடைக்கும் அதன் பிறகு நான் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னதும் மனோஜ் கோவப்பட்டு அந்த நபரை திட்டி அனுப்புகிறார்.

இதனால் மனோஜ் கடுப்பாகி இருக்கிறார். அந்த நேரத்தில் ஒருவர் வந்து உங்களை கோவிலில் சந்தித்து பேசுவதற்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ உங்களிடம் உண்மையை சொல்ல வேண்டுமாம். அதனால் சீக்கிரம் போங்க என்று அந்த நபர் மனோஜிடம் சொல்கிறார். உடனே மனோஜ் நமக்கு மொட்டை கடுதாசி போட்ட நபராக தான் இருக்கும். என்னுடன் சேர்ந்து நீயும் வா நாம் யாரென்று பார்க்கலாம் என்று ரோகிணியும் சேர்த்து கூப்பிடுகிறார்.

இது அந்த பிளாக் மெயில் பண்ணும் தினேஷ் ஆகத்தான் இருக்கும் என்று ரோகிணி பயப்பட ஆரம்பித்து விடுகிறார். ஆனால் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று லோக்கல் ரவுடி சிட்டியிடம் உதவி கேட்டு விடுவார். இதனை தொடர்ந்து விஜயா நடனப்பள்ளியில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அங்கே அந்த காதல் ஜோடிகள் செய்யும் சில்மிஷங்களை பார்த்து விடுகிறார்.

இதனால் இப்பொழுது தான் விஜயாவிற்கும், தோழி பார்வதிக்கும் அவர்கள் மீது சந்தேகம் வருகிறது. அதுடன் மீனா சொல்வது சரிதான் என்று இப்பொழுதுதான் விஜயாவுக்கும் தெரிய வரப்போகிறது. ஆனால் இந்த விஷயத்தை விஜயா கண்டுபிடிப்பதற்குள் அந்த காதல் ஜோடிகளால் விபரீதம் ஏற்பட்டு விஜயா பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News