வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

மீனாவின் நகையை தூக்கி எறிந்து ராட்சசியாக மாறிய விஜயா.. புருசனை மன்னிப்பு கேட்க விடாமல் தடுக்கும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து போட்ட ஸ்கெச்சில் விஜயா மனோஜ் மாட்டிக் கொண்டார்கள். ஆனாலும் ரோகிணி எப்படியாவது புருஷனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மனோஜ் தான் எந்த தப்பும் பண்ணவில்லை என்று சொல்கிறார்களா, பிறகு ஏன் அவரை வம்புக்கு இழுக்கிறாய் என்று மனோஜை ரூமுக்குள் கூட்டிட்டு போக பார்த்தார்.

உடனே முத்து அவர்களை போக விடாமல், எங்க பார்லர் அம்மா உன் புருஷனை கூட்டிட்டு போகிறாய். அவன் தான் முக்கியமான குற்றவாளி என சொல்லி மனோஜிடம் உண்மையை கேட்கிறார். அதற்கு மனோஜ் என் நண்பரிடம் தான் நான் 4 லட்சம் ரூபாய் வாங்கினேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் முத்து அந்த நண்பரையும் நான் சந்தித்து பேசி விட்டேன்.

மீனாவை அவமானப்படுத்திய திருந்தாத விஜயா

உங்களுக்கு எல்லாத்துக்கும் சந்தேகம் இருக்கிறது என்றால் இப்பொழுது ஃபோன் பண்ணி ஸ்பீக்கரில் போட்டு மனோஜை பேச சொல்லு. உன் நண்பன் தான் கொடுத்து இருக்கிறாரா என்று பார்ப்போம் என முத்து ஆதாரத்தை கேட்க ஆரம்பித்துவிட்டார். உடனே திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்த மனோஜை பார்த்ததும் அனைவருக்கும் சந்தேகம் வந்துவிட்டது.

அந்த சந்தேகத்தின் படி அண்ணாமலை, மனோஜை கூப்பிட்டு உண்மையை சொல்லு என்ன நடந்தது என்று என அதட்டி கேட்கிறார். அதற்கு மனோஜ், நான் ஏமாந்து போனதால் டீலரிடம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க எனக்கு வேறு வழி தெரியாமல் அம்மாவிடம் பணம் கேட்டேன். உடனே அம்மா மீனாவின் நகையை கொடுத்து அடகு வைக்க சொன்னார்.

ஆனால் அடகு வைத்த போது எனக்கு தேவையான பணம் கிடைக்காததால் அதை விற்று விட்டேன் என்று உண்மையை கூறிவிட்டார். இதை கேட்டதும் அண்ணாமலை நீ எல்லாம் திருந்தவே மாட்டியா என்று அடிக்க தொடங்கி விட்டார். அப்பொழுது முத்துவும் சேர்ந்து அடித்த நிலையில் புருஷனை காப்பாற்றுவதற்காக ரோகிணி தடுத்து நிறுத்துகிறார்.

உடனே ரோகினிடம், அண்ணாமலை உன் புருஷன் செஞ்சது சரியா என்று கேட்கிறார். அப்பொழுது அவர் செஞ்சது தப்புதான் எனக்கு இது முன்னாடியே தெரிந்திருந்தால் இந்த அளவிற்கு நடந்திருக்க விடமாட்டேன். அவன் பாவம் அவனை விட்டு விடுங்கள் என்று அண்ணாமலை இடம் சொல்கிறார். அதற்கு அண்ணாமலை திட்ட வரும்பொழுது விஜயா நம்ம பையனுக்காக தானே இதை பண்ணுனேன் என்று சமாதானப்படுத்த பார்க்கிறார்.

ஆனால் அண்ணாமலை நீ எல்லாம் குடும்பத் தலைவியாக இருக்க லாயக்கியை இல்லை. உன்னால் தான் அவன் கெட்டுப் போகிறான். இப்படியே பண்ணிட்டு இருந்தால் ஒட்டு மொத்த குடும்பமும் பாழாகிவிடும். நீ செய்த தவறுக்கு என்னிடம் பேசாதே என்று சொல்லிவிட்டார். உடனே விஜயா இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக ரூம்குள் போய் கதவை சாத்திக்கொண்டு ஒரு டிராமாவை போட்டுவிட்டார்.

பிறகு விஜயா வெளியே வந்து அண்ணாமலையிடம் பேச முயற்சி பண்ணுகிறார். அப்பொழுது முத்து, மனோஜை மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி ஏன் புருஷன் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் அதெல்லாம் முடியாது என்று சொல்கிறார்.

உடனே விஜயா, இந்த நகைக்காக தான இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணுகிறீர்கள். இந்த இதை நீயே வச்சுக்கோ என்று விஜயாவின் நகையை கழட்டி மீனாவின் முகத்தில் தூக்கி எறிந்து ஒரு ராட்சசி போல் நடந்து கொள்கிறார். அந்த வகையில் விஜயாவுக்கு ஏற்ற மருமகளாக தான் ரோகிணியும் பொய்பி பித்தலாட்டம் என அனைவரையும் ஏமாற்றி வருகிறார். இவர்கள் இருவருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல. ஜாடிக்கேத்த மூடியாக விஜயாவுக்கு ஏற்ற மருமகளாக ரோகிணி இருக்கிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News