செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முத்து வாழ்க்கையை கெடுக்க சகுனி வேலையை பார்த்த விஜயா.. கோபப்பட்ட புருஷனை கூழ் படுத்திய மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனா சந்தோஷமாக இருக்கக் கூடாது. அதுவும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது தனியாக போக வேண்டும் என்று ஆசைப்படும் விஜயாவிற்கு தற்போது சாதகமாக ஒரு விஷயம் அமைந்துவிட்டது. அதாவது மீனாவின் தம்பி சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் கோவிலில் பூஜை பண்ணி கூழ் கொடுக்கும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இதனால் சத்யா, மீனாவுக்கு போன் பண்ணி கூப்பிடுகிறார். மீனா, முத்துவிடம் சொல்லி பர்மிஷன் கேட்கிறார். அதற்கு முத்து நானும் வரமாட்டேன் நீயும் அங்கே போகக்கூடாது என்று கோபமாக சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த மீனாவுக்கு சுருதி கொடுத்த அட்வைஸ் என்னவென்றால், நீங்கள் என்ன அவர் வீட்டு வேலைக்காரியா? அவர் சொல்வது தான் கேட்கணுமா என்ன?

சாமர்த்தியமாக நடந்து கொண்ட மீனா

அவர் வருவதும் வராமல் போவதும் அவருடைய இஷ்டம், ஆனால் உங்களை அங்கே போகக்கூடாது என்று சொல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. சத்யா உங்களுடைய தம்பி, அதனால் நீங்கள் போயிட்டு வாங்க என்று சுருதி வழக்கம்போல் மீனாவிற்கு அட்வைஸ் கொடுத்து விடுகிறார். இதைக் கேட்டதும் மீனா, சுருதி சொல்வது சரிதான் என்று முடிவு எடுத்து கோவிலுக்கு கிளம்பி விடுகிறார்.

இதை ஒட்டு கேட்ட விஜயா இத வச்சு முத்து மீனா வாழ்க்கையில் பிரச்சனை பண்ணி விடலாம் என்று சகுனி வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் சவாரியை முடித்து வீட்டிற்கு வந்த முத்து, மீனாவை தேடுகிறார். அப்பொழுது விஜயா, உன் பொண்டாட்டி எங்க எங்க இருக்கிறாள். அவள் எப்போதும் இந்த வீட்டிற்கு நல்ல மருமகளாகவும் இருந்ததில்லை, உன் பேச்சை கேட்கும் பொண்டாட்டியாகவும் நடந்ததில்லை.

அதனால் தான் நீ போகக்கூடாது என்று சொல்லியும் அவள் தம்பி பாசத்தை காட்டும் விதமாக உன் காதில் பூவ சுத்தி விட்டு கோவிலுக்கு கூழ் ஊத்த போய்விட்டாள் என்று வத்தி வைத்து விட்டார். இதனால் கடுப்பான முத்து கோபத்தில் கோவிலுக்கு போகிறார். அங்கே மீனா, கோவிலுக்கு வருபவர்களுக்கு கூல் பிரசாதமாக கொடுத்து வருகிறார். இதை வரிசையில் நின்று முத்துவும் வாங்கி கோபமாக மீனாவை முறைக்கிறார்.

முத்துவை பார்த்த மீனா பயத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார். ஆனால் எப்போதும் போல இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை அசால்ட்டு என்று சொல்வதற்கு ஏற்ப, கோவக்கார புருஷன் ஆக இருக்கும் முத்துவைக் கூழ்ப்படுத்தி சமாதானப்படுத்தி விடுவார். இதை எதிர்பார்க்காத விஜயா, இரண்டு பேரும் சண்டை போட்டு தான் வீட்டிற்கு வருவார்கள் என்று கனவு கோட்டை கட்டி காத்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் முத்து மீனா வீட்டுக்கு வரும் பொழுது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பாசமாகத்தான் வருவார்கள். அந்த வகையில் இவர்களை எக்காரணத்தைக் கொண்டும் யாராலும் பிரிக்க முடியாது என்று விஜயாவுக்கு நன்றாக மண்டையில் ஏறி இருக்கும். இன்னொரு பக்கம் ரோகிணி செய்து வரும் பொய்ப் பித்தலாட்டங்களை வெளிய கொண்டுவராமல் ஒவ்வொரு காட்சிகளும் மேலோட்டமாக நகர்ந்து வருகிறது. இதனால் மக்கு மனோஜ் பொண்டாட்டி மீது கண்மூடித்தனமாக நம்பி வருகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News