வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு

Siragadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் மாமியார் கேரக்டரில் நடிக்கும் விஜயா அவருடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து வருகிறார். அந்த வகையில் பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்த்து, மீனாவை வீட்டு வேலைக்காரியாக ஆக்கிவிட்டார். இதற்கிடையில் மாட்டிக் கொண்டு தற்போது முழிப்பது பணக்கார வேஷம் போட்டு நடித்து வரும் ரோகிணி.

அதாவது ஸ்ருதியின் அம்மா 50 பவுன் நகையை வீட்டிற்கு வந்து கொடுத்ததும் விஜயா ரொம்ப ஓவராகவே ஆட்டம் போடுகிறார். அந்த வகையில் மீனாவை கொத்தடிமையாக ஆக்கி வீட்டு வேலைகளையும் தவிர வந்த மருமகளுக்கு ஜூஸ் கொடுப்பது, குளிப்பதற்கு வெண்ணி போட்டு கொடுப்பது போன்ற வேலைகளை செய்ய சொல்கிறார்.

அத்துடன் எப்படியாவது மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு விரட்டி விட வேண்டும். அவர்கள் வெளியே தனிக் குடித்தனம் போய்விட்டால் மற்ற இரண்டு பணக்கார மருமகளை வைத்து ராஜ வாழ்க்கை வாழலாம் என்று மிக கேவலமான திட்டத்தை போட்டிருக்கிறார். அது சம்பந்தமாக தன்னுடைய கணவரிடம் பேசி இருக்கிறார்.

Also read: நாளா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்.. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையில் கூட்டு சேர்ந்த வில்லன்

அவரும் நான் யோசித்து ஒரு நல்ல முடிவு சொல்கிறேன் என்ற பதிலை கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இவர் எடுக்கப் போகும் முடிவு விஜயாவுக்கு சாதகமாக இருக்காது. இதற்கிடையில் ஸ்ருதிக்கு, ரோகினியை பெடிக்யர் பண்ணி விட சொல்கிறார். அவரும் வேற வழியில்லாமல் சுருதிக்கு அனைத்தையும் செய்து விடுகிறார். ஆனால் இது இப்படியே போனால் நமக்கு மரியாதை கிடைக்காது என்று புலம்பிக்கொள்கிறார்.

இதனை உடனே சரி செய்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாமியாருடைய வீக்னஸ் பாயிண்டை புரிந்து கொண்டு அவர் கையில் ஒரு கட்டுப் பணத்தை கொடுத்து விஜயா வாயை ரோகினி அடைத்து விடுகிறார். ஆனால் இதை தொடர்ந்து இவரால் செய்ய முடியாது. காரணம் பணக்காரர் மாதிரி தான் வேஷம் போட்டிருக்கிறார், தவிர உண்மையான பணக்காரர் கிடையாது.

இந்த விஷயம் கூடிய விரைவில் வெளிவரும் பொழுது ரோகினியின் முகத்திரை கிழியப்படும். அத்துடன் சுருதியும் மாமியார் நினைக்கிற மருமகளாக கண்டிப்பாக இருக்கப் போறது கிடையாது. ஆக மொத்தத்தில் பணக்கார மருமகளை நம்பி கடைசியில் வீணாக கஷ்டப்பட போகிறார். அந்த நேரத்தில் பக்க பலமாக இருந்து ஆறுதல் சொல்வது முத்துவும் மீனாவும் ஆகத்தான் இருக்கும்.

Also read: ஹனிமூன்-க்கு குடும்பத்துடன் போகும் ஜோடி.. ஏழு ஜென்மம் எடுத்தாலும் பாண்டியன் திருந்தவே மாட்டார் போல

Trending News