90களில் இணை பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள், அதன்பின் விஜயகாந்த்திற்கு திருமணம் நடந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விலகி விட்டனர். ஆனால் அவர்கள் நண்பர்களாக இருந்த காலகட்டத்தில் நட்புக்காகவே கேப்டன் பிடிக்காத இயக்குனரின் படத்தில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் விஜயகாந்திற்கே படத்தின் கதை பிடிக்கவில்லை என்றாலும், கேப்டனின் நெருங்கிய நண்பரும் பிரபல தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தருக்கு பிடித்திருந்தால் அவருக்காகவே நடிப்பார். அப்படிப்பட்ட கதையை தான் ஒருமுறை ராவுத்தர் தேர்ந்தெடுத்தார். சொல்ல போனால் ராவுத்தர் தான் அந்த கதையவே எழுதினார்.
அந்தக் கதைக்கான இயக்குனரையும் தேர்ந்தெடுத்து விட்டார். இவர் தான் விஜயகாந்த்திற்கு மிகப் பொருத்தமான இயக்குனர் என்று ராவுத்தர் 100% நம்பினார். இதன்பிறகு ராவுத்தர் விஜயகாந்த்திற்கு அவர் எழுதிய கதையை சொல்கிறார். ஆனால் கேப்டனுக்கு அவ்வளவாக அந்த கதை பிடிக்கவில்லை. இருப்பினும் ராவுத்தர் சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக ஷூட்டிங்கிற்கு செல்கிறார்.
அப்போது அந்தப் படத்தின் இயக்குனருக்கும் விஜயகாந்த்திற்கும் முரண்பாடு நிறையவே ஏற்படுகிறது. இதனால் பலமுறை சூட்டிங் தடைபட்டு போகிறது. இதனால் அந்த இயக்குனர் ராவுத்தரிடம் புலம்புகிறார். உடனே அவரும் விஜயகாந்த்திடம், ‘ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய்? இந்த படம் சிறப்பாக அமையும். ஒரு வேலை அப்படி நடக்காவிட்டால் அதற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சொல்கிறார்.
Also Read: விஜயகாந்தின் தற்போதைய மோசமான நிலைமைக்கு காரணம் அவரே.. பகிர் சம்பவங்களை கூறிய பிரபலம்
உடனே கேப்டன், ‘நண்பா உனக்காக இதை நான் செய்கிறேன்’ என்று அந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனரின் விருப்பப்படி முடித்துக் கொடுத்தார். அந்தப் படம் தான் விஜயகாந்தின் சினிமா கேரியருக்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த ‘புலன் விசாரணை’. அந்தப் படத்தின் இயக்குனர் தான் ஆர். கே. செல்வமணி.
1990 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஹனஸ்ட் ராஜ் என்ற கேரக்டரில் விஜயகாந்த் நடித்து மிரட்டி இருப்பார். இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த், ஆர். கே. செல்வமணி இருவரும் கீரியும் பாம்புமாய் இருந்ததை தெரிந்த ஒரு சிலருக்கு படத்தின் வெற்றியை பார்த்தபின் வாயடைத்துப் போனார்கள்.