திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

காலம் கொடுமையானது, விஜயகாந்த்தை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்.. தேமுதிகவின் அடுத்த பொதுச் செயலாளர்

Vijayakanth: ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு அந்தஸ்தை அடைந்த விஜயகாந்த் அரசியல் வரலாற்றிலும் புது சரித்திரம் படைத்தார். இவருடைய அரசியல் வரவு பலருக்கும் ஆட்டம் காட்டியது என்பதை மறுக்க முடியாது. ஆனால் காலம் சில நேரங்களில் கொடுமையானது.

முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டிய கேப்டன் இப்போது வீல்சேரில் உட்கார்ந்து இருக்கிறார். கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் தற்போது பூரண நலம் பெற்று இருக்கிறார்.

Also read: உயிர் போகும் நிலைமையில் உள்ள என்ன காப்பாத்துங்க கேப்டன்.. கதறும் நடிகர்

அதைத்தொடர்ந்து அவருடைய தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்த தொண்டர்கள் இன்று அவருடைய நிலையை பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். தற்போது தேமுதிக கட்சியின் புது பொதுச் செயலாளர் அறிவிப்புக்கான கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பங்கேற்ற கேப்டன் தன் மனைவி பிரேமலதாவை பொதுச் செயலாளராக அறிவித்திருக்கிறார். இனி விஜயகாந்த் நிறுவன தலைவராக மட்டுமே தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

Also read: மருத்துவமனையில் இருந்து வெளியான ஷாக்கிங் புகைப்படம்.. அடையாளமே தெரியாமல் மாறிப்போன கேப்டன்

அப்போது கேப்டன் தன்னுடைய கையை உயர்த்தி காண்பித்ததும் தொண்டர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் எழுந்தது. ஆனாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் இருக்கும் கேப்டனை பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.

மீண்டு வந்த கேப்டன்

vijayakanth
vijayakanth

அது அப்படியே தொண்டர்கள் முகத்திலும் பிரதிபலிக்கிறது. அதிலும் வீல்சேரில் உட்கார முடியாமல் அவர் சரிந்து விழப்போகும் போது சுற்றி இருந்தவர்கள் அவரை பிடித்து உட்கார வைத்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தேமுதிகவின் அடுத்த பொதுச் செயலாளர்

premalatha
premalatha
- Advertisement -

Trending News