ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பத்து பைசா சம்பளம் வாங்காமல் ஹிட் கொடுத்த விஜயகாந்த்.. வாரிசை தூக்கி விட்டதால் கிடைத்த சொத்து

நடிகர் விஜயகாந்த் நடிப்பதையும் தாண்டி தமிழ் சினிமாவில் பல முன்னேற்றங்களுக்கு முன்னோடியாய் திகழ்ந்தவர். பல இயக்குனர்களையும், நடிகர்களையும் அறிமுகப்படுத்தியவர். ஷூட்டிங்கில் இருக்கும் அனைத்து நடிகர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட ஒரே மாதிரியான உணவை வயிறார சாப்பிட கொடுத்தவர். மேலும் நடிகர் சங்கம் கடனில் மூழ்கியிருந்த காலத்தில் பல இன்னல்களை சந்தித்து பத்திரத்தை மீட்டு கொடுத்தவர்.

இப்படி பல உதவிகளையும், தான தர்மங்களையும் செய்து வந்த விஜயகாந்த், பிரபல வாரிசு நடிகரின் கேரியரை தூக்கி நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜயகாந்த் பொதுவாக இளம் நடிகர்களை வரவேற்த்து, அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில சினிமா குறித்த அறிவுரைகளை வழங்குவார். மேலும் அவர்களின் படங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால், அவரே முன்வந்து சரி செய்து கொடுப்பார்.

Also Read: சிங்கம் போல் திருமண நாளில் விஜயகாந்த் கொடுத்த போஸ்.. சத்ரியன் போல் வந்த கேப்டன்

அந்த வகையில் விஜயகாந்த் பல நடிகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துக்கொடுத்துள்ளார். அந்த வகையில் சூர்யாவின் மாயாவி, இரவு சூரியன், தாய் மொழி உள்ளிட்ட பல படங்களில் நடிகர்கள் அல்லது இயக்குனர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இயக்குனரும்,நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான படத்தில் விஜயகாந்த் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் 1992 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமாகி நடித்த நாளைய தீர்ப்பு படம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி பெருந்தோல்வியான நிலையில், விஜய் பல கேலி கிண்டலுக்கு ஆளானார். தனது மகனின் கேரியரை காப்பாற்ற வேண்டி எஸ்.ஏ சந்திரசேகர் அடுத்தடுத்த படங்களில் விஜயை நடிக்க வைக்க திட்டம் தீட்டினார்.

Also Read: விஜய்க்கு முன்னாடி இளையதளபதி பட்டம் வைத்திருந்த ஹீரோ.. அடுத்த விஜயகாந்த் என பெயர் எடுத்த நடிகர்

இதனிடையே 1993 ஆம் ஆண்டு வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்தை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை அணுகியுள்ளார். விஜயகாந்தும் சரி என்று அப்படத்தில் விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார். அத்திரைப்படம் சூப்பர்ஹிட்டான நிலையில், அப்படத்தில் கிடைத்த லாபத்தை விஜயகாந்திடம் கொடுத்துள்ளார்.

அதை விஜயகாந்த் வாங்க மறுத்த நிலையில், நான் என் கடமையை தான் செய்தேன். விஜய் மேலும்,மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென கூறி அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார். எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜயகாந்துக்கு ஏதேனும் கைமாறு செய்ய வேண்டுமென நினைத்து,சாலிகிராமத்தில் ஒரு வீட்டை விஜயகாந்தின் பெயரில் வாங்கி அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்திடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த்துவிட்டு சென்றாராம்.

Also Read: போலீஸ் கதாபாத்திரத்தில் வெற்றிகண்ட 10 ஹீரோக்கள்.. சத்திரியனுக்கு சாவே இல்ல என மிரட்டிய விஜயகாந்த்

Trending News