வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜயகாந்தை வைத்து மச்சான் சுதீஷ் சேர்த்து வைத்த சொத்துக்கள்.. கேப்டன் கிட்ட கூட இவ்வளவு இருக்காது!

The Captain will not have this much: பிரேமலதாவின் தம்பியும் விஜயகாந்தின் மச்சானும் ஆகிய எல்.கே.சுதீஷ் சென்னையில் பிரம்மாண்டமான வீடு கட்டி அதில் மனைவி மற்றும் இரண்டு மகளுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் தான் விஜயகாந்துக்கு எல்லாமே என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் முன்னணியில் நின்று வழி நடத்தி வந்தார்.

ஆனால் ஒரு பக்கம் இவர் பேச்சைக் கேட்டு தான் பிரேமலதா, விஜயகாந்தை திசை திருப்பி விட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. பிரேமலதாவும் தன்னுடைய தம்பி நமக்காக உறுதுணையாக இருக்கிறார் என்று அவர் சொல்வதை அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பி விட்டார். ஆனால் விஜயகாந்த் என்கிற ஒரு விஷயத்தைத் தவிர பிரேமலதாவின் தம்பியிடம் பெரிசாக சொல்லும்படியாக எந்த விஷயமும் கிடையாது.

ஆனால் போகப் போக பல சொத்துக்களை வாங்கி குவிக்கும் அளவிற்கு அதிபதியாகி விட்டார். அத்துடன் திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமாக இளைஞர் அணி தலைவராக முக்கிய பங்கு வகித்து வருகிறார். அந்த வகையில் LKS பிரிமியர் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கிறார்.

Also read: விஜயகாந்த் அரசியலுக்கு தூபம் போட்ட இயக்குனர்.. இவர் ஏத்தி விடலனா மனுஷன் உசுரோட இருந்திருப்பாரு

மேலும் LKS பிரைவேட் லிமிடெட்,LKS வேர் ஹவுஸ், LKS வியாபார வர்த்தக சேவை, LKS குளோபல் லாஜிஸ்டிக், LKS ஸ்டோரேஜ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கேப்டன் மீடியா, ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளையும் வைத்திருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் விஜயகாந்துக்கு இருக்கும் அத்தனை சொத்துகளுக்கும் இவர் ஒரு பார்ட்னர் ஆகவே இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து பல கோடிக்கணக்கில் லாபத்தை சம்பாதித்து வருகிறார். ஆனால் இவருக்கு என்று பூர்விக சொத்து எதுவுமே இருந்தது இல்லை. இது எல்லாமே விஜயகாந்த் மூலமாக இவருக்கு கிடைக்கப்பட்ட சொத்துக்கள்.

இன்னும் சொல்ல போனால் விஜயகாந்துக்கு கூட இவ்வளவு சொத்துக்கள் இருக்காது. அந்த அளவிற்கு விஜயகாந்த் பெயரின் மூலமாவே பல மடங்கு சொத்துக்களை சம்பாதித்து தற்போது கோடீஸ்வரராக பகட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். பொதுவாக ஒரு பழமொழி உண்டு, மலையேற போனாலும் மச்சினன் தயவு வேணும்! என்று சொல்வார்கள். ஆனால் இப்படிப்பட்ட மச்சானால் தான் விஜயகாந்தின்  சரித்திரமே உடைந்து போய்விட்டது.

Also read: என்ன கொடுமடா இது! விஜயகாந்துன்னு சொல்லிட்டு இமான் அண்ணாச்சி உருவத்தில் திறந்த சிலை

Trending News