சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

53 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் விஜயகாந்த், ரஜினி பட நடிகை.. மாப்பிள்ளை தேடும் குடும்பம்

Actor Rajinikanth and vijaykanth: பொதுவாக நடிகைகள் பெரும்பாலும் திருமண வயதை கடந்து தான் கல்யாணம் செய்து கொள்கின்றனர். காரணம் என்னவென்றால் மார்க்கெட் உள்ள போதே படங்களில் நடித்து சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி நடிகை திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு அவருக்கு கதாநாயகி வாய்ப்பு வருவது மிகவும் கடினம்.

ஆகையால் தான் பெரும்பாலான நடிகைகள் 30 வயதை தாண்டி திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் 53 வயது வயதாகும் விஜயகாந்த் மற்றும் ரஜினி பட நடிகை தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே சுற்றி வருகிறார். இதற்கான காரணம் என்னவென்று யூடியூப் ஒன்றில் பயில்வான் கூறியிருக்கிறார்.

Also read: ரஜினியை போல ஏமாற்றும் விஜய்.. அதிருப்தியை ஏற்படுத்தும் சம்பவம்

அதாவது நடிகை சோபனா விஜயகாந்தின் பெரும்பான்மையான படங்களில் நடித்திருப்பார். பொன்மனச் செல்வன், பாட்டுக்கொரு தலைவன், எங்கிட்ட மோதாதே ஆகிய படங்களில் விஜயகாந்த்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.அதேபோல் ரஜினியின் தளபதி படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் மொழி படங்களில் கிட்டத்தட்ட 230 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்த சூழலில் மிகச் சிறந்த பரதநாட்டிய கலைஞர் ஆகவும் திகழ்ந்துள்ளார் சோபானா. பல மேடை நிகழ்ச்சியில் தனது பரதநாட்டிய நடனத்தின் மூலம் சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

Also read: ரஜினி கமலுக்கு டஃப் கொடுத்த நடிகர்.. ஒரே ஒரு நடிகருக்கு 3 படம் 500 நாட்கள் திரையரங்களில் ஓடியது

இந்நிலையில் சோபானா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் நண்பருடன் சோபனா சுற்றித்திரிந்தார் என்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். ஆனால் தற்போது 53 வயதானாலும் சோபனா திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி சோபானாவின் குடும்பத்தினர் இப்போதும் அவருக்கு மாப்பிள்ளை தேடி வருவதாக சினிமா விமர்சகர் பயில்வான் அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். ஆனால் சோபாவின் ரசிகர்களோ அவர் தனது வாழ்க்கையை பரதநாட்டியத்திற்காகவே அர்ப்பணித்து உள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தில் சோபானா நடித்திருந்தார்.

Also read: ஏக்கத்துடன் இருந்த வடிவேலுவை தூக்கி விட்ட விஜயகாந்த்.. நன்றியை மறந்து அசிங்கப்படுத்திய கொடுமை

Trending News