வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் 2ம் பாகத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி.. அதே வாய்ப்பை தட்டி பறித்த நடிகர்

தமிழ்சினிமாவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் விஜயகாந்தின் பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் தற்போது கேப்டன் விஜயகாந்த் அவர்களால் நடிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளார்.

அவ்வாறு விஜயகாந்த் நடிப்பில் மிகப்பெரிய லாபத்தை கொடுத்த படம் சின்ன கவுண்டர். ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, சலீம் கவுஸ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் சின்னக்கவுண்டர் படத்தில் நடித்திருந்தனர்.

சின்னக்கவுண்டர் படத்தில் முதலில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது. அவருடைய கால்ஷீட் கிடைக்காததால் அதன்பின் விஜயகாந்த் நடித்தார். விஜயகாந்தின் டாப் 10 படங்களில் கண்டிப்பாக சின்ன கவுண்டர் இடம்பெறும். இந்தப் படம் 175 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

தற்போது இப்படத்தின் இயக்குனர் உதயகுமார் சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். கிட்டத்தட்ட விஜயகாந்த் தோற்றத்தில் உள்ள நடிகரை தேர்வு செய்ய படக்குழு முடிவெடுத்திருந்தது. அதனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக உள்ள ஆர்கே சுரேஷ் அவர்கள் தற்போது சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சின்னக்கவுண்டர் படத்தில் வயிற்றில் பம்பரம் விடும் காட்சி முதலில் பல விமர்சனங்களை பெற்றாலும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுபோன்ற காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் மிக விரைவில் தொடங்க உள்ளது.

Trending News