திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மருத்துவமனையில் இருந்து வெளிவந்த அறிக்கை.. விஜயகாந்த் எப்படி இருக்கிறார் தெரியுமா?

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் வெளியானது. சாதாரண மருத்துவ சோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவருடைய கட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியானது.

நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை, மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது என்ற செய்தி வெளியானது. இது அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களும், யூடியூப் சேனல்களும் தேவையில்லாத நிறைய நெகட்டிவ் செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர்.

ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் மனதை ஆறுதல் படுத்தும் விதமாக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் விஜயகாந்தை பார்த்த பிறகு அவருடைய நலம் விரும்புகிறது இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கம்பீரமாக இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

Also Read:விஜயகாந்த் நிலை குலைந்து போக இது எல்லாம் தான் காரணம்.. சிங்கம் போல் இருந்த மனுஷன், எவ்வளவுதான் தாங்குவார்

சமீபத்தில் கேப்டனின் மனைவி பிரேமலதா, மீடியாக்களிடம் தயவு செய்து விஜயகாந்த் பற்றி எந்த தவறான செய்திகளையும் பரப்பாதீர்கள். உங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் என்னிடம் கேளுங்கள், அவரைப் பற்றி நீங்கள் பரப்பும் நெகட்டிவ் சேதி ஒரு மனைவியாக என் மனநிலையை ரொம்பவே பாதிக்கிறது, இப்படி ஒரு செய்தியை பரப்பும் அளவுக்கு அவர் மீது உங்களுக்கு என்ன வன்மம் என்றும் ரொம்பவும் மனம் உடைந்து கேட்டிருந்தார்.

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

விஜயகாந்த்திற்கு கிண்டியில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் நடிகரும், அரசியல் வாதியுமான திரு விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பி விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

MIOT
MIOT

விஜயகாந்த் அவர்களின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை, அவர் பூரண குணமடைந்து இருக்கிறார். இதற்கு தற்போது பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இது குறித்து அவருடைய கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:80, 90களில் கமலுக்கு டஃப் கொடுத்த விஜயகாந்த்.. ஒரே நாளில் விடாமல் 22 தடவை மோதிய கேப்டன்

- Advertisement -

Trending News