ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

விஜயகாந்த்தின் இன்னொரு வெர்ஷன் தான் அஜித்.. பேட்டியிலேயே புகழ்ந்து பேசிய பிரபலம்

கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப்பட்ட முதல் காரணம் அவர் தன்னுடைய படங்களில் பல சமூக கருத்துக்களை சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் திரைப்பட சங்கங்களுக்கும் பல உதவிகளை செய்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் உடைய ஒரு புகைப்படம் ரீசண்டா வெளியாகி அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலகில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. உடல்நிலை சரியில்லாமலும் முகத்தோற்றமும் மொத்தமா விஜயகாந்த்துக்கு மாறியிருந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வேதனைப்பட்டனர்.

மீம்ஸ்கள் உருவான ஆரம்ப காலத்தில் விஜயகாந்த்தின்ய புகைப்படம் இல்லாமல் இருக்காது. இப்ப வரைக்கும் விஜயகாந்த்தின் புகைப்படத்தை மீம்ஸ் கிரியேட்டர்ஸ் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த அளவு விஜய்காந்த பிடித்தவங்க நிறைய பேரு.

விஜய்காந்த் பற்றி தற்போது ஒரு இன்டர்வியூவில் இயக்குனர் முரளி அப்பாஸ் ஒரு விஷயத்தை சொல்லி இருக்காரு. அஜித்தை வைத்து ராசி என்ற படத்தை ஹிட் கொடுத்தவர் தான் முரளி அப்பாஸ். விஜயகாந்த் ஒரு போராளி, படங்களில் நடிப்பதை தாண்டியும் ஏதாவது பிரச்சனை அப்படின்னா விஜயகாந்த் அதை எடுத்துக்கொண்டு அவர் போராடுவாரு. விஜயகாந்தின் மற்றொரு வெர்ஷன் தான் அஜித் எனக் கூறலாம், சொந்தமாக துணிந்து முடிவு எடுக்கும் திறமை மற்றும் தன்னுடைய சுய லாபத்திற்காக ரசிகர்களை எந்த ஒரு சூழ்நிலையையும் பயன்படுத்த மாட்டார்கள்.

தமிழ் திரை உலகத்தில் மட்டும் இல்லாமல் அரசியலில் கால் பதித்து விஜயகாந்த் ஒரு ரவுண்டு வருவார் என்று திரையுலகினர் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அதேபோல் எதிர்க்கட்சி தலைவராகும் வலம்வந்தார். உடல்நிலை மட்டும் சரியா இருந்தால் சினிமாவில் எப்படி சாதித்தாரோ அதேபோல் அரசியலிலும் பல சாதனைகளை படைத்திருப்பார் என கூறியுள்ளார்.

இப்ப அவருக்கு உடல் நிலையும் முகத்தோற்றமும் தான் மாறி இருக்கு ஆனா அந்த மனசு இப்பவும் அப்படியேதான் விஜயகாந்துக்கு இருக்கும் என்று இயக்குனர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்த் போல ஒரு தங்கமான உள்ளம் கொண்டவர்கள் இந்த திரையுலகில் ஒரு சிலர் மட்டும்தான் இருக்கிறார்கள் எனவும் விஜயகாந்த் திரைத்துறையை தாண்டிசக கலைஞர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

Trending News