செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

தேடி வருபவர்களுக்கு வயிறார சாப்பாடு போடும் விஜயகாந்த்.. 40 வருடங்களுக்கு முன் ஷூட்டிங் செட்டில் ஏற்பட்ட அவமானம்

ரசிகர்களால் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும்  அதனாலேயே பலரும் இவரை கொண்டாடி வருகின்றனர். இன்று அவர் பொதுவெளியில் அதிகம் வரவில்லை என்றாலும் அவருக்கான ரசிகர்களின் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது. அவரை ஒரு முறையாவது பார்த்து விடமாட்டோமா என ஏங்கும் உள்ளங்களும் இருக்கின்றன. இப்படி ஒரு புகழோடு இருக்கும் கேப்டன் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார். அதன் காரணமாகவே மற்றவர்களுக்கு உதவும் குணமும் அவருக்கு இயல்பாகவே வந்து விட்டது.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். அதாவது 40 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் ஒரு சாதாரண நடிகராக சில திரைப்படங்களில் தலைக்காட்டி கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் கருப்பாக இருக்கும் காரணத்தால் பல பட வாய்ப்புகளும் அவருக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு சைடு ஆக்டர், செகண்ட் ஹீரோ போன்ற ரோல்களில் நடித்து தான் அவர் ஹீரோ அந்தஸ்திற்கு வந்தார்.

அந்த சமயத்தில் அவரை யூனிட்டில் யாரும் பெரிதாக மதிக்க மாட்டார்களாம். அது மட்டுமல்லாமல் பெரிய ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றால் இவருக்கு சுத்தமாக மரியாதை கிடைக்காதாம். ஹீரோவாக நடித்தாலும் கூட இவரிடம் பல பாகுபாடுகளை அவர்கள் காட்டி இருக்கின்றனர். அந்த வகையில் ஹீரோயின் நடிப்பதற்கு தயாராகி விட்டால் விஜயகாந்த் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கூட பாதியிலேயே எழுப்பி நடிக்க சொல்வார்களாம்.

அதிலும் ஹீரோயினுக்கு ஒரு சாப்பாடு, புது முக ஹீரோவாக இருந்தால் வேறு சாப்பாடு என்ற வித்தியாசங்களும் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட அவமானங்களை சந்தித்ததால் தான் விஜயகாந்த் பெரிய ஹீரோவாக உயர்ந்த பிறகு ஒரு வைராக்கியமான முடிவை எடுத்திருக்கிறார். அதாவது அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளரிடம் கண்டிஷனாக சொல்லி விடுவாராம்.

அவர் கடைசியாக நடித்த படம் வரை அந்த விஷயம் கடைபிடிக்கப்பட்டும் இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்போதும் கூட அவருடைய அலுவலகத்தில் அனைவருக்கும் இலவச சாப்பாடு போடப்பட்டு வருகிறது. சினிமா வாய்ப்புகளை தேடி கஷ்டப்பட்டு வரும் பலரும் அங்கு தான் வயிறார சாப்பிடுகிறார்கள். இப்படி ஒரு தங்க மனசுக்காரராக அவர் இருப்பதால் தான் அவரை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Trending News