செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வடிவேலு விஷயத்தில் பெரிய மனுசனாக நடந்து கொண்ட விஜயகாந்த்.. கோர்த்து விடாமல் காப்பாற்றிய கேப்டன்

இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்று இருக்கும் நடிகர் வடிவேலுவுக்கு ஆரம்ப காலத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். சொல்லப் போனால் வடிவேலுவின் இந்த வளர்ச்சிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.

வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த வடிவேலுவுக்கு விஜயகாந்த் தான் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதன் பிறகு தான் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. பின்னர் வடிவேலு, ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

Also read : லெட்டர் எழுதிய விஜய்.. அண்ணனை இன்றுவரை விட்டுக்கொடுக்காத இளையதளபதி

அதிலும் விஜயகாந்த், வடிவேலு கூட்டணியில் வரும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர்களின் கூட்டணி பிரிந்தது. மேலும் அந்தப் பிரச்சனை அரசியல் ரீதியாக உருவெடுத்தது.

அதாவது சில ஆண்டுகளுக்கு முன் வடிவேலுவின் வீட்டில் சிலர் கல் எறிந்து கலாட்டா செய்தனர். அது விஜயகாந்த் கட்சியில் உள்ள தொண்டர்கள்தான் என்று கூறி வடிவேலு பரபரப்பை கிளப்பினார். அது மட்டுமல்லாமல் விஜயகாந்தை அவர் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி பேட்டி கொடுத்தார்.

Also read : வடிவேலுவை தூக்கி எறிந்த நெல்சன்.. ஒரு வேளை ரஜினி சொல்லி இருப்பாரோ!

அது தேர்தல் சமயம் என்பதால் விஜயகாந்துக்கு எதிராக அவர் பிரச்சாரமும் செய்தார். அப்போது வடிவேலுவின் அந்த குற்றச்சாட்டுகளை பற்றி கேப்டனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கேப்டன் என்னுடைய கட்சியை சேர்ந்த யாரும் இந்த செயலை செய்யவில்லை என்று கூறினார்.

இந்த கலாட்டாக்களுக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று எனக்கு தெரியும் என்று கூறிய விஜயகாந்த் அந்த நடிகரின் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார். ஏனென்றால் இந்த பிரச்சனையை பெரிதாக்க அவர் விரும்பவில்லை.

மேலும் அதை வெளியில் கூறினால் வடிவேலுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும். அதனால் கேப்டன் அந்த பழி என் மேலே இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக கூறினாராம். அந்த அளவுக்கு அவருக்கு தங்கமான மனசு. அதன் காரணமாக தான் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்காக பலரும் துடிக்கின்றனர்.

Also read : பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜயகாந்த்.. ஆளே உருமாறி பரிதாபமாய் வெளிவந்த போட்டோ

Trending News