வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாழ்நாளில் விஜயகாந்த் நடித்த ஒரே ‘A’ சர்டிபிகேட் படம்.. வளர்த்த குருவிற்காக சம்மதித்த கேப்டன்

விஜயகாந்த் இப்போது உடல் நலகுறைவால் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை நினைத்த ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். ஆனால் அவர் சினிமாவில் இருந்த நேரத்தில் ஒரு சிங்கம் போல கர்ஜித்து வந்தார். அவரது படங்கள் அதிக நாள் ஓடி சாதனை படைத்தது. ஆனால் ஆரம்பத்தில் விஜயகாந்த் ஒரு முரட்டுத்தனமான லுக்கில் தான் இருந்தார்.

சிறிதுகாலம் வில்லனாக நடித்து வந்த அவர் சண்டைக் காட்சிகளில் மிரள விட்டதால் அதன் பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் விஜயகாந்த்-க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தூரத்து இடி முழக்கம். அதன் பிறகு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

Also Read : வில்லனாக விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. வளர்ந்து வரும் மார்க்கெட்டை அழிக்க போட்ட திட்டம்

இந்நிலையை விஜயகாந்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்ஏ சந்திரசேகர் தான். இவர்களது காம்போவில் செந்தூரப்பூவே, சட்டம் ஒரு இருட்டறை, குடும்பம் என பல படங்கள் வெளியாகி இருந்தது. தனது குரு எஸ்ஏசி கேட்டுக் கொண்டதால் விஜயகாந்த் ஒரே ஒரு ஏ சர்டிபிகேட் படத்தில் நடித்துள்ளார்.

அதாவது 1981 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சொப்னா விஜயசாந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சில் துணிவிருந்தால். இந்த படத்தில் கவுண்டமணி, மனோரமா, சங்கிலி முருகன் போன்ற பிரபலங்களும் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.

Also Read : விஜயகாந்த் மனதில் லப்டப்பை ஏற்படுத்திய 4 நடிகைகள்.. வயசு கோளாறு என ஆசையை மறைத்த கேப்டன்

இந்நிலையில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் மற்றும் கிளாமர் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. விஜயகாந்த் தனது வாழ்நாளில் இந்த ஒரே ஒரு ஏ சர்டிபிகேட் படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். அதன் பிறகு மக்கள் கொண்டாடும் படியான படங்களில் நடித்தார்.

இப்போது அவர் சினிமாவில் இருந்து விலகினாலும் கோடான கோடி மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். இதற்கு காரணம் ஒரு வகையில் அவருடைய படங்கள் என்றாலும், மற்றொன்று அவருடைய குணம் தான். அடுத்தவருக்கு உதவுவது, பசியை போக்குவது என பல நன்மைகளை விஜயகாந்த் செய்துள்ளார்.

Also Read : ரஜினி, விஜயகாந்த் போல கோட்டை விடக்கூடாது.. நின்னு நிதானமாக காய் நகர்த்தும் தளபதி, உதவும் பெரிய புள்ளி

Trending News