செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Election Movie Review : இல்லாதவன் உழைக்கிறான், இருக்கிறவன் அறுவடை பண்றான்.. விஜயகுமாரின் எலக்சன் முழு விமர்சனம்

உரியடி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விஜயகுமாரின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது எலக்சன் படம். தமிழ் திரைக்கதை மற்றும் வசனத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் அரசியல் கதைகளத்தை கொண்டுள்ளது.

சமீபத்தில் தேர்தல் பரபரப்பாக நடந்த நிலையில் இந்தச் சமயத்தில் எலக்சன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. சமூகத்தில் நடக்கும் தவறுகளை தைரியத்துடன் தனது படங்களில் எடுத்துரைப்பவர் விஜயகுமார்.

அந்த வகையில் தந்தை அரசியலில் பல வருடமாக இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த விடுகிறார். தந்தைக்கு சரியான அஞ்சலி செலுத்த வேண்டும் என்றால் தானும் அரசியலில் இறங்க வேண்டும் என்பதை விஜயகுமார் உணர்கிறார்.

அரசியலில் சற்றும் விருப்பமில்லாத நடராசனாக இருக்கும் விஜயகுமார் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக போட்டியிடுகிறார். அதன் பின் அரசியல், தலைவர்கள், துரோகிகள், சூழ்ச்சியாளர்கள் என பலரால் வன்முறை, போட்டி, பொறாமை ஏற்படுகிறது. கடைசியில் அரசியல் என்னவென்று நடராசன் புரிந்து கொண்டாரா, தேர்தலில் வெற்றி பெற்றாரா என்பதுதான் எலக்சன் படத்தின் கதை.

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விஜயகுமார், கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோரின் தேர்வு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. அரசியல் என்றால் என்ன, அதற்கான விளக்கத்தையும் படத்தில் கொடுத்துள்ளார் இயக்குனர் தமிழ்.

மேலும் படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் தொய்வு இருந்தது. யார் இதில் வில்லன் என்று யோகிக்க முடியாத அளவுக்கு கதையை எடுத்துச் சென்றிருந்தனர். உரியடி விஜயகுமாரின் வழக்கமான கதைக்களமாக இந்த படமும் அமைந்ததால் ரசிகர்களுக்கு சற்று அலுப்பும் ஏற்பட்டது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5

Trending News